Published:Updated:

சில சுவாரஸ்யங்கள் | டால்ஸ்டாய், பிரெய்லி #MyVikatan

History
News
History

லியோ டால்ஸ்டாய் 'அம்மாவிடம் சென்று, நான் இவ்வளவு நேரமாக லியோ டால்ஸ்டாயுடன் விளையாடிக் கொண்டிருந்தேன் என்று சொல்' என்ற கூற, அந்த குழந்தையும் 'சரி, நான் என் அம்மாவிடம் சொல்கிறேன். நீயும் உங்க அம்மாவிடம் பூங்காவில் மேரியுடன் விளையாடினேன்' என்று சொல் எனக் கூறிவிட்டு ஓடியதாம்!

சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை, வாசிக்கும் உங்களுடைய கண்முன் காட்சியாக்கும் முயற்சியே இந்த கட்டுரை.

ரஷ்யாவை சேர்ந்த லியோ டால்ஸ்டாய் பல்வேறு இலக்கிய படைப்புகள் மூலமாக புகழ்பெற்ற, அவரது 'போரும் அமைதியும்' என்ற என்ற இலக்கிய படைப்பு உலகப் புகழ்பெற்றது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு இன்றளவும் உலகம் முழுக்க கொண்டாடப்படும் படைப்பாக உள்ளது. தனது வாழ்நாளிலே மிகப்பெரிய புகழ்பெற்ற படைப்பாளியாக இருந்த லியோ டால்ஸ்டாய் அவர்கள் ஒருநாள் ரஷ்யாவில் இருந்த ஒரு பூங்காவில் அமர்ந்திருக்க, அப்போது அங்கு மேரி என்ற குழந்தை வந்து விளையாட, லியோ டால்ஸ்டாயும் அந்த குழந்தையுடன் மிகுந்த உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார். சிறிது நேரம் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது சிறுமி மேரியின் அம்மா, மேரியை அழைக்க, மேரியும் 'அம்மா கூப்பிடறாங்க சென்று வருகிறேன்' என்று கூறிட, லியோ டால்ஸ்டாய் அந்தக் குழந்தையிடம் 'உனது அம்மாவிடம் சென்று, நான் இவ்வளவு நேரமாக லியோ டால்ஸ்டாயுடன் விளையாடிக் கொண்டிருந்தேன் என்று சொல் ' என்ற கூற, மேரி எனும் அந்த குழந்தையும் 'சரி, நான் என் அம்மாவிடம் சொல்கிறேன், நீயும் உங்க அம்மாவிடம் பூங்காவில் மேரியுடன் விளையாடினேன்' என்று சொல் என கூறிவிட்டு ஓடியதாம்!

Leo Tolstoy
Leo Tolstoy
Tolstoy on 23 May 1908 at Yasnaya Polyana, Lithograph print by Sergey Prokudin-Gorsky

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பார்வையற்றவர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது பாடல்களை பாடிய படி செல்வதை கண்டு இருப்போம், சிலர் இசைக் கருவிகளை லயத்துடன் வாசிப்பதை கேட்டிருப்போம். பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டின் நீள, அகலத்தை கைகளல் அளவிட்டே ரூபாய் நோட்டின் ஓரமாக தடவியே எத்தனை ரூபாய் என சரியாக கண்டு பிடிப்பதை பார்த்திருப்போம். பார்வையற்றவர்கள் படிக்கும் முறையின் பெயர் ப்ரெய்லி என்ற எழுத்து முறை என அறிவோம், அந்த எழுத்து முறையினை கண்டுபிடித்த லூயி பிரெய்லியை பற்றி காண்போம்.

1809-ல் பிரான்ஸ் நாட்டுல பாரிஸ் நகரத்துக்குப் பக்கத்துல இருக்க ஒரு சின்ன கிராமத்துல ஒரு குழந்தை பிறக்குது. அந்தக் குழந்தைக்கு அவங்க அப்பா அம்மா லூயி பிரெய்லி-னு பேர் வைக்கிறாங்க..பிறந்தப்போ அந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியமாவும், நல்ல கண் பார்வையோடையும்தான் இருந்துச்சு. பிரெய்லியோட அப்பா குதிரைகளின் பாடப் பகுதியில் பொருத்தும் லாடம் தயாரிக்கிற வேலையை செய்து வந்தார். பிரெய்லிக்கு 3 வயசு இருக்கப்போ, அவங்க அப்பாவினுடைய குதிரைகளுக்கான லாடம் செய்யும் பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த வேளையில், தெரியாம அந்த லாடக் கருவி அவருடைய ஒரு கண்களில் குத்தி, உடனடியா அதற்கு மருத்துவம் பண்ணாங்க. முதலில், அது பெரிய காயமா தெரியல. ஆனா, அந்த சின்ன விபத்து கொஞ்சம் கொஞ்சமா அவருடைய கண்கள்ல பாதிப்ப உண்டாக்க... பிரெய்லிக்கு 5 வயசு ஆகும்போதே, அவருடைய பார்வை முழுமையாக பரிபோக... பார்வைதான் போச்சு, பிரெய்லியோட தன்னம்பிக்கை அப்படியேதான் இருந்துச்சு. பார்வைத் திறன் சவாலோடவும் பள்ளியில சிறந்த மாணவராகத்தான் பிரெய்லி இருந்தாரு. ஆனால், சாதாரண மாணவர்கள் படிக்கிற பள்ளியில பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்குத் தேவையான சரியான கல்விமுறை இல்லைனு பிரெய்லிக்குத் தோனிக்கிட்டே இருந்திருக்கு. தனக்கு பத்து வயசு இருக்கப்போ, பாரிஸ்ல இருக்கிற Royal Institute for Blind Youth அப்படிங்கிற, பார்வைத்திறன் சவால் உடைய குழந்தைகளுக்குன்னே செயல்பட்ட சிறப்பு பள்ளியில சேர்றாரு பிரெய்லி. அந்தப் பள்ளியின் நிறுவனர் வேலன்டின் அவுவி (Valentin Hauy), பார்வைத் திறன் சவால் உடைய குழந்தைகள் படிக்கிறதுக்குனே வடிவமைக்கப்பட்ட புத்தகங்களை உருவாக்கி வச்சிருந்தாரு. பிரெய்லி அந்தப் பள்ளியில் சேர்ந்த 1819 காலகட்டத்துல மொத்தம் 14 புத்தகங்கள் அந்தப் பள்ளியில் இருந்திருக்கு.

Louis Braille
Louis Braille

சாதாரணமா நாம் பயன்படுத்துற எழுத்துகளை பார்வைத் திறன் சவால் உடைய குழந்தைகள் படிக்கிற மாதிரி கொஞ்சம் மேடா அச்சடிச்சிருப்பாங்க. அந்த எழுத்தைத் தொட்டுப் பார்த்து அதோட வடிவத்த உணர்ந்து பார்வைத் திறன் சவால் உடையவங்க படிச்சிக்கலாம். ஆனால், இந்த முறையில் பார்வைத் திறன் சவால் கொண்டவங்க படிக்க ரொம்ப நேரம் ஆச்சு. மேலும், புத்தகமும் ரொம்ப கணமா இருந்துச்சு. இதுவும்கூட பார்வைத்திறன் சவால் கொண்டவங்களுக்கான கற்றல் முறை இல்லைனு பிரெய்லி நினைச்சார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதான் பிரெய்லிக்கு பிரெஞ்சு ராணுவம் பயன்படுத்துற 'Night Writing' முறை பற்றித் தெரிய வந்துச்சு. ராணுவத்துல போர் முனையில இருக்க சிப்பாய்க்கு வழக்கமான முறையில தகவல் அனுப்புனா, இரவு நேரங்கள்ல அதைப் படிக்க நெருப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அது எதிரிப் படைக்கு எளிதா இலக்காக்கிடும். இதைத் தவிர்க்கத்தான் இந்த 'Night Writing' அப்படிங்கிற முறைய சார்ல்ஸ பார்பியர்-ங்கிற பிரெஞ்ச் கேப்டன் உருவாக்கியிருந்தாரு. 12 புள்ளிகளை அடிப்படையா வச்சு உருவாக்கப்பட்ட இந்த முறையில, காகிதத்துல புள்ளிகள் மேலெழுந்து மேடு மாதிரி ஒரு அமைப்பை கொண்டிருக்கும். குறிப்பிட்ட வரிசையில புள்ளிகள் இருந்தா அது ஒரு எழுத்தையோ எண்ணையோ குறிக்கும். அதே மாதிரி எல்லா எழுத்து மற்றும் எண்ணுக்கும் புள்ளிகளை வச்சு குறியீடு உருவாக்கியிருப்பாங்க. இதை விரலால தொட்டுப் பார்த்து, என்ன தகவல் சொல்லியிருக்காங்கனு இரவு நேரத்துல விளக்கு வெளிச்சம் இல்லாமையே போர் முனையில இருக்க ஒரு சிப்பாயால தெரிஞ்சுக்க முடிஞ்சது.

இரண்டாம் உலகப்போரின் போது இரவு நேரங்களில் விமானம் மூலமாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகளை வீசுவதை தவிர்க்க போர்க் காலங்களில் வீடுகளில் விளக்குகளை எரியவிட மாட்டார்கள் என்பார்கள்.

Braille's memorial in the Panthéon
Braille's memorial in the Panthéon

பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்கான பள்ளியில் சேர்ந்த இரண்டே வருஷத்துல பிரெய்லி, இந்த முறையை முழுசா கத்துக்கிட்டாரு. ஆனா, இந்த முறையிலேயும் படிக்க நிறைய நேரம் எடுத்துக்கிறதா நினைச்ச பிரெய்லி, இதே முறையை கொஞ்சம் மாத்தி பார்வைத் திறன் சவால் உடையவர்கள் படிக்கிற மாதிரி எளிமையான வடிவமா கொண்டு வர்ற முயற்சில இறங்கினாரு. 12 புள்ளிகள் கொண்ட Night Writing முறை மாதிரி இல்லாம, 6 புள்ளிகள் மட்டும் வச்சு 63 விதமான சேர்க்கையில எழுத்துக்கள் மற்றும் எண்களை உருவாக்கினார். இந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டது 1824-ல. 1829-ல தன்னோட இந்தப் புதிய முறையை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினாரு பிரெய்லி.

இதற்கிடைப்பட்ட காலத்துல அவர் படிச்ச பள்ளியிலேயே வரலாறும், கணக்குல அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி வகுப்புகளும் எடுக்கத் தொடங்கிட்டாரு பிரெய்லி. பிரெய்லிக்கு படிப்பு மட்டுமில்லாம இசையிலையும் பேரார்வம் இருந்துச்சு. சின்ன வயசுலையே செல்லோ மற்றும் ஆர்கன் அப்படிங்கிற ரெண்டு இசைக்கருவிகளை நல்லா வாசிக்கக் கத்துக்கிட்டாரு. 1834-ல இருந்து 1839 வரை பல சர்ச்சுகள்ல இந்த இசைக் கருவிகளை அவர் வாசிச்சிருக்காரு. இசை மேல் ஆர்வம் இருந்ததால அவர் உருவாக்குன பிரெய்லி முறையை இசைக்கும், கணக்குப் பாடங்களுக்கும் உருவாக்குனாரு!