Published:Updated:

கொரோனா விதிமுறையை மீறிப் பிறந்தநாள் விழா! - ஹாங்காங் உள்துறை அமைச்சர் ராஜினாமா

ஹாங்காங் உள்துறை அமைச்சர் காஸ்பர் சூய்

கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை அமைச்சர் காஸ்பர் சூய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனா விதிமுறையை மீறிப் பிறந்தநாள் விழா! - ஹாங்காங் உள்துறை அமைச்சர் ராஜினாமா

கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை அமைச்சர் காஸ்பர் சூய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Published:Updated:
ஹாங்காங் உள்துறை அமைச்சர் காஸ்பர் சூய்

உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிவருவதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளும் மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் ஹாங்காங்கின் உள்துறை அமைச்சர் காஸ்பர் சூய் கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கொரோனா
கொரோனா

கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு ஹாங்காங் தலைவர் கேரி லாம் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. அதாவது ஹாங்காங் தலைவர் கேரி லாம் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்துறை அமைச்சராக இருந்துவந்த காஸ்பர் சூய், கடந்த மாதம் 3-ந் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டபோது, அந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உட்பட யாரும் முகக்கவசம் அணியவில்லை என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காஸ்பர் சூய் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism