Published:Updated:

மோதும் ஹாங்காங், சீறும் சீனா! - முற்றியிருக்கும் மூன்று மாதப் பனிப்போர்

அந்தோணி அஜய்.ர

ஹாங்காங் - சீனா இடையேயான ஒப்படைப்பு சட்ட மசோதாவுக்கு (Anti-Extradition bill) எதிராக, ஹாங்காங்கிலும், உலகின் பல்வேறு நகரங்களிலும் உலகளாவிய போராட்டம் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஹாங்காங்
ஹாங்காங்

சீனாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஹாங்காங்கில் தஞ்சமடையும் பட்சத்தில், அவர்களை ஹாங்காங் அரசாங்கம் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்த மசோதாவின் விதி. ஏற்கெனவே ஹாங்காங் ஒன்பது உலக நாடுகளுடன் ஒப்படைப்பு சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்
ஹாங்காங்

1997-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் நகரத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் சீனாவிடம் ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் அரை தன்னாட்சி முறை ஆட்சி தொடரப்பட்டது. அதாவது, ஹாங்காங்கின் ராணுவம், வெளியுறவு போன்ற சில துறைகளில் தலையிடும் உரிமையை சீனா பெற்றிருந்தது. தனி நாடு கோரி போராட்டங்கள் வெடிக்க, 2017-ம் ஆண்டு ஹாங்காங்குக்கு எனத் தனித்தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங் முழுமையான தனி நாடாக அறிவிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஆனால், தேர்தல் தேதிக்கு முன்னதாகவே, சீன அரசு கைகாட்டும் நபர்கள் மட்டுமே ஹாங்காங் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சட்டத்தை 2014-ம் ஆண்டு சீனா புகுத்தியது.

இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் குடையுடன் வீதியில் இறங்கி `குடை’ போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஒப்படைப்பு சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஹாங்காங்கின் அரசியல் தலைவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்படலாம் . மேலும், இந்தப் போராட்டம் தோல்வியடைந்தால் ஹாங்காங் வீழ்ந்துவிடும் என்றும், தங்கள் உரிமைக்காகவே வீதிக்கு வந்து போராடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

ஹாங்காங்
ஹாங்காங்
ஹாங்காங்கில் தனி நாடு கோரி போராட்டங்கள் வெடிக்க, 2017-ம் ஆண்டு தனித் தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங் முழுமையான தனி நாடாக அறிவிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இதுவே மக்களின் கோபத்துக்கு பிரதானம்.

ஜூலை 1-ம் தேதி ஹாங்காங் விடுதலை தினத்தையொட்டி பேரணிகள் நடத்தப்படுவது வழக்கம். அப்படித் தொடங்கிய பேரணி தற்போது 4,30,000 மக்களுடன் போராட்டமாக வெடித்துள்ளது. போராட்டத்தின்போது சட்டசபை அலுவலகம் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் சீன அரசு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.

ஹாங்காங்
ஹாங்காங்

போராட்டக்காரர்கள் பலர் அமைதியான முறையில் போராடினாலும் வெடிகுண்டுகள் மற்றும் சில ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீஸார் கண்டறிந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 21-ம் தேதி, ஹாங்காங்கில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்துக்கு ஆதரவாகக் கறுப்பு நிற ஆடை உடுத்தியவர்களை பைப்புகள் மற்றும் இரும்புக் கம்பிகள் கொண்டு வெள்ளை சட்டை மற்றும் முகமூடி அணிந்த கும்பல் தாக்கினர். இதில் ஒரு சட்டசபை உறுப்பினர், பத்திரிகையாளர்கள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் எனத் தெளிவாகத் தெரியாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்
ஹாங்காங்

போராட்டம் முற்றியுள்ள நிலையில் மசோதாவின் மீதான மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹாங்காங்கில் ராணுவத்தைக் களமிறக்க சீனா திட்டமிட்டுவருவதாகவும் செய்திகள் பரவிவருகின்றன.