Published:Updated:

`மார்க்கே சொல்லிட்டாரு... நான்தான் நம்பர் ஒன்!' -அமெரிக்க நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ட்ரம்ப்

ட்ரம்ப் மற்றும் மார்க்
ட்ரம்ப் மற்றும் மார்க்

``ட்விட்டர் போன்ற வலைதளங்கள் இல்லையெனில் அதிகமான உண்மைகளை இழந்திருப்போம்" என ட்ரம்ப் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப், சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடக்கூடியவர். சமீபத்தில், ரஷ் லிம்பாக்கின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ``நான் மார்க் சக்கர்பெர்க் உடன் இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது அவர், `உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். முகநூலில் நீங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறீர்கள்’ எனக் கூறியதாகக் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இரவு விருந்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். அவரது முகநூல் பக்கத்தை 25 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில், சமூக வலைதளங்கள் குறித்த தனது கருத்தையும் அந்நிகழ்ச்சியில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.

`கிரேஸி ட்ரம்ப்... எதுவும் முடியப்போவதில்லை!’ - எச்சரிக்கை விடுக்கும் சுலைமானியின் மகள் ஜீனாப்

அதில், ``பொய்யான தகவல்களைச் சொல்லும் ஊடகங்களைப் பின்னுக்குத் தள்ள சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறேன். ட்விட்டர் போன்ற வலைதளங்கள் இல்லையெனில் அதிகமான உண்மைகளை இழந்திருப்போம். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கவே முடியாது. தவறான கதை ஒன்று, சரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் எனக்கு கவலை இல்லை. ஏனெனில், தவறு என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், அந்தக் கதையைப் படிக்கும் வேறு ஒருவருக்கு இதுகுறித்து தெரியாது. இதுமாதிரியான விஷயங்களை சமூக ஊடகங்களின் வழியாக இப்போது என்னால் சொல்ல முடிகிறது. நான் அதை ட்விட்டர் என்றுகூட அழைப்பதில்லை. சமூக ஊடகம் என்றே கூறுவேன்” என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலில் இரானுடனான பிரச்னை, குடியரசுக் கட்சியின் ஒற்றுமை ஆகியவற்றைக் குறித்தும் ட்ரம்ப் பேசியுள்ளார்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்
அடுத்த கட்டுரைக்கு