Published:Updated:

`ஓ மை காட்... நான் சான்டாவைப் பார்த்தேன்!’ - மகிழ்ச்சியில் குதிக்கும் `க்யூட்’ பேபி #ViralVideo

சான்டா
சான்டா

லூனா மூன்றரை வயதுக் குழந்தை. இவர், சில நாள்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பரிசு ஒன்றைக் கேட்டிருந்தார்.

அமெரிக்காவின் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் மற்றும் அவரின் மனைவியும் பிரபல மாடலுமான கிறிஸ்ஸி டீஜென், தங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விதம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக கிறிஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

merry christmas to you and yours ❤️

A post shared by chrissy teigen (@chrissyteigen) on

ஜான் மற்றும் கிறிஸ்ஸிக்கு லூனா சைமன் மற்றும் மைல்ஸ் தியோடர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. லூனா மூன்றரை வயதுக் குழந்தை. இவர், சில நாள்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் பரிசு ஒன்றைக் கேட்டிருந்தார். கிறிஸ்ஸி கடந்த டிசம்பர் 8-ம் தேதி லூனா பேசும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிருந்திருந்தார். அதில், வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு மார்க்கரை வைத்து வரைந்துகொண்டே, ``அன்புள்ள சான்டா, எனக்கு ஒரு பேலே நடனம் ஆடுகின்ற பொம்மை வேண்டும். அப்போதுதான் நான் அவளுடன் தினமும் தூங்க முடியும். லூனாவின் ஒவ்வொரு இரவையும் நேசிக்க முடியும்” என்று தன்னுடைய மழலை மொழியில் கூறியிருந்தார்.

`கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் விராட் கோலி!' - வைரலாகும் வீடியோ

லூனா, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் அவரின் வருகைக்காகவும் காத்திருந்தார். கிறிஸ்துமஸ் அன்று காலையில், தன்னுடைய வீட்டின் ஜன்னல் வழியே பனி நிறைந்துகிடக்கும் வீதிகளை லூனா பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, கிறிஸ்துமஸ் தாத்தா பனிகளுக்கிடையே ஓடி வந்து லூனாவைப் பார்த்து கையசைத்து விட்டு கண்ணில் பட்டு மறைந்தார். லூனாவின் தந்தை ஜான், ``நான் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்த்தேன். ஓ மை காட்! நான் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்த்தேன்” என்று கூற, லூனா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

மைல்ஸ் தியோடர்
மைல்ஸ் தியோடர்
instagram

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் கிறிஸ்ஸி பகிர்ந்திருந்தார். `யாராவது கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்த்தீங்களா?' என்ற கேப்ஷனுடன் மைல்ஸ் பனிமனிதன் மாதிரி வேடம் அணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பார்த்த லூனாவின் மகிழ்ச்சியும் மைல்ஸின் அழகான பனிமனிதன் புகைப்படமும் சமூக வலைதளங்களில் `ஹவ் ஸ்வீட், ஐ லவ் திஸ்’ போன்ற கமென்டுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆமா! பனிக்குள்ள இருந்து ஓடி வந்து மறைந்துபோன அந்த கிறிஸ்துமஸ் தாத்தா யாரா இருக்கும்?!

`கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 7 வயது சிறுவனின் க்யூட் கடிதம்!’- நெகிழ்ந்த நெட்டிசன்கள், குவிந்த பரிசுகள்
அடுத்த கட்டுரைக்கு