Published:Updated:

`கொரோனா தொடர்பாக இந்தியாவின் மனிதாபிமான கோரிக்கை!’ - நிராகரித்தாரா பாக்.பிரதமர் இம்ரான் கான்?

மோடி - இம்ரான் கான்
மோடி - இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சர்வதேச அளவில் இந்தியாக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தீவிரமாக தெரிவித்து வருகிறார்.

சீனாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அந்நாட்டில் வசிக்கும் பிற நாட்டு மக்களை அழைத்துவரும் நடவடிக்கைகளை பல நாடுகளும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவும் இதுதொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அப்போது அண்டைநாட்டு மக்களையும் மனிதநேயத்தின் அடிப்படையில் அழைத்துவரும் பணியில் இந்தியா ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான்
இம்ரான் கான்

25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதுவரை சீனாவில் மட்டும் 700-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார், 35000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சீனாவின் அண்டை நாடுகள் எல்லையைப் பூட்டியதுடன் சீன மக்கள் நுழைவதும் தொடர்பாகவும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளும் சீனாவில் வாழும் மக்களை அழைத்துவந்து தனி முகாம்களில் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

`தனியார் வீடு.. 8 லட்சமாக உயர்ந்த சம்பளம்?'- சர்ச்சையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியாவும் சில நாட்களுக்கு முன்பு சீனாவில் படிக்கும் மாணவர்கள் உட்பட பலரையும் அழைத்து வர விமானங்களை ஏற்பாடு செய்தது. இரண்டு கட்டமாக விமானங்களை இயக்கி சுமார் 650 பேரை அழைத்து வந்து முகாம்களில் தங்க வைத்துள்ளது. இதில் அண்டை நாடுகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முன் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் வெளியிட்டு செய்தியில், ``சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்டுவர சென்ற விமானத்தில் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த 7 பேரையும் அழைத்துவர வேண்டும் என மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அரசு அவர்களை அழைத்து வந்தது” என்று வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா

மேலும், ``இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் சீனாவில் இருந்துள்ளனர். அவர்களை மீட்க உதவுவதாக மத்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இதற்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் நிலவும் குழப்பங்களும் பொருளாதார சிக்கலுமே பிரதமர் பதிலளிக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் காஷ்மீர் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வரும் சூழலில் கடந்த ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னை தீவிர கட்டத்தை எட்டியது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தீவிரமாக தெரிவித்து வருகிறார். இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் எடுக்கும் முயற்சிகளிலும் தோல்வியடைவதால் அந்நாட்டு இராணுவம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

``வெட்கப்படுங்கள், இந்தியாவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!''-சீனாவில் குமுறும் பாகிஸ்தான் மாணவர்கள்!
அடுத்த கட்டுரைக்கு