Published:Updated:

இது நடந்தால் தங்கத்தின் விலை இரு மடங்காக உயரும்..!

தங்கம்

கச்சா எண்ணெய் வர்த்தகங்களில் டாலருக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்போது மறைமுகமாக அமெரிக்காவை பெருமளவு அது பாதிக்கும். அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை ரஷ்யா பெறத்தொடங்கும் என்ற யூகமும் இதன் அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்பட்டுள்ளது.

இது நடந்தால் தங்கத்தின் விலை இரு மடங்காக உயரும்..!

கச்சா எண்ணெய் வர்த்தகங்களில் டாலருக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்போது மறைமுகமாக அமெரிக்காவை பெருமளவு அது பாதிக்கும். அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை ரஷ்யா பெறத்தொடங்கும் என்ற யூகமும் இதன் அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்பட்டுள்ளது.

Published:Updated:
தங்கம்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு மாற்றாக ரஷ்யா தங்கத்தினை வாங்கத் தொடங்கினால் தங்கத்தின் விலை தற்போதைய விலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கிரெடிட் சூசை நிறுவனத்தை சார்ந்த ஜோல்டன் போஸ்ஆர் தெரிவித்துள்ளார்.

தற்போது இது ஓர் ஊகமாக பார்க்கப்பட்டாலும் இது போன்று நடக்க வாய்ப்பில்லை என்று அறுதி இட்டு கூற முடியாது.

கிரிப்டோ கரன்சிகள்

யுக்ரைன் நாட்டுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு பிறகு கிரிப்டோ கரன்சிகளின் விலை 30% வரை அதிகரித்தது. அதற்கு  காரணமாக டாலருக்கு மாற்றாக ரஷ்யா கிரிப்டோ கரன்சிகளை வாங்கத் தொடங்கும் என்ற யூகம் முக்கிய காரணியாக இருந்தது. சில மாதங்களில் அவ்வாறு நடைபெறாத காரணத்தினால் கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் சரிந்தன. 

 கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பேரல் 120 டாலராக இருந்த கச்சா எண்ணையின் விலை தற்போது இந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையான பேரல் 80 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள்தோறும் இரண்டு மில்லியன் பேரல் அளவிற்கு குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு எடுத்துள்ளன. அப்பொழுது ரஷ்யா மீது கூடுதல் தடை கொண்டு வருவதற்கும் விவாதிக்கப்பட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அமைச்சகம் தமது நாட்டின் மீது கொண்டு வரும் கூடுதல் தடைகள் உலக நாடுகளுக்கு மேலும் பிரச்னைகளையே கொண்டு வரும் என்று கூறியுள்ளது.

உக்கரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு முக்கிய காரணமாக இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி சந்தையை யார் பிடிப்பது என்ற போட்டி உள்ளது. இந்த வர்த்தகங்களில் டாலருக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்போது மறைமுகமாக அமெரிக்காவை பெருமளவு அது பாதிக்கும். அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை ரஷ்யா பெறத்தொடங்கும் என்ற யூகமும் இதன் அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

தற்போது நமது இந்திய நாட்டில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ஐந்தாயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. உலக அளவில் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது கடந்த 40 ஆண்டுகளாக தங்கத்தில் செய்திருந்த முதலீடு ஃபிக்சட் டெபாசிட்டுகளில் செய்யப்பட்டுள்ள முதலீட்டை விட அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது. அதனால் தங்கத்தின் மீதுள்ள மோகம் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனால் முதலீட்டு கலவைகளில் ஒரு பகுதியாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்பொழுதும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. யூகத்தின் அடிப்படையில் உடனடியாக முதலீடு செய்யவில்லை என்றாலும் நீண்ட கால நோக்கில் தங்கத்தில் முதலீடு செய்வது நிச்சயம் லாபகரமானதாகவே இருக்கும் என்று கூறலாம்.