Published:Updated:

`மூன்று குழந்தைகளின் அம்மா; ஃபார்ச்சூனின் இளம் தொழிலதிபர் ரேங்க்!’ - இவான்காவின் பெர்சனல் பக்கங்கள்

Ivanka Trump
Ivanka Trump ( www.instagram.com/ivankatrump )

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பணிக்காக, இவான்கா இதுவரை எந்த ஊதியமும் பெற்றுக்கொள்ளவில்லை என்கின்றன வெள்ளை மாளிகையின் பதிவுகள்.

இவான்கா ட்ரம்ப் என்றால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள், வெள்ளை மாளிகையின் ஆலோசகர் என்பதுதான் நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வரும். அடுத்து தொழிலாளர் வளர்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுவாக்குவது என்று இயங்கி வருகிற இவான்காவின் அறிவார்ந்த பக்கம் நினைவுக்கு வரும். இவற்றைத் தாண்டி இவான்காவின் பெர்சனல் முகமும் ரொம்பவே சுவாரஸ்யமானது.

Ivanka with her Husband
Ivanka with her Husband
www.instagram.com/ivankatrump

மனைவி, அம்மா, சகோதரி, மகள், வெள்ளை மாளிகையின் ஆலோசகர் என்கிற வரிசையில்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் இவான்கா. சென்ற வருடம் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், 'உங்கள் தந்தை மீண்டும் அமெரிக்க அதிபரானால், அரசாங்கப் பணிகளில் ஈடுபடுவீர்களா' என்று கேட்கப்பட்டது. இதற்கு இவான்கா, 'என் குழந்தைகளுக்குத்தான் நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். என் முடிவுகள் அவர்களை முன்வைத்தே இருக்கும். அதனால் அரசாங்கப் பணிகளை மறுபடியும் தொடர மாட்டேன்' என்றார்.

தற்போது 38 வயதாகும் இவான்காவுக்கு மூன்று குழந்தைகள். மூன்று குழந்தைகள் பிறந்தபோதும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 'சொல்லத் தெரியாத உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நான் நல்ல அம்மாவாகவோ, நல்ல தொழில்முனைவராகவோ இல்லையென்றே நினைக்கிறேன்' என்று மருத்துவ நிகழ்ச்சியொன்றில் மனந்திறந்து பேசியிருக்கிறார்.

Ivanka with her family
Ivanka with her family
SAUL LOEB/AFP/Getty Images

இவான்காவின் திருமணத்திலும் சுவாரஸ்ய செய்தி உண்டு. காதல் கணவர் ஜேர்ட் குஷ்னரை திருமணம் செய்ய, பழைமைவாதங்களும் கட்டுப்பாடுகளும் மிகுந்த யூத மதத்துக்கு மாறினார். `வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளை நாங்கள் முழுக்க முழுக்க ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும். அந்த நாள்களில் போன்கூட செய்ய மாட்டோம்' என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

`என் குழந்தைகளுக்குத்தான் நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். என் முடிவுகள் அவர்களை முன்வைத்தே இருக்கும். அதனால் என் தந்தை மறுபடியும் அதிபரானால், நான் அரசாங்கப் பணிகளை மறுபடியும் தொடர மாட்டேன்' என்றார் ஒரு முறை!
Ivanka
Ivanka
Brian Marcus/Fred Marcus Photography via Getty Images

அப்பாவைப்போலவே ரியல் எஸ்டேட் பிசினஸிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவான்காவுக்கு ஆர்வமுண்டு. 1997 மிஸ் டீன் அமெரிக்கா அழகிப்போட்டி, இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி. இதை நடத்துகிறபோது இவான்காவுக்கு 15 வயது.

ட்ரம்ப் விசிட்டால் இந்தியாவுக்கு என்ன ஆதாயம்? - ஓர் அலசல்

16 வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டீன் பத்திரிகை அட்டைப்படத்தில் இடம்பெற்றவர், 17 வயதில் மாடலாக கேட் வாக் செய்ய ஆரம்பித்தார். வொர்க்கஹாலிக்கான இவான்கா, 'பெரும்பாலான நாள்களில் ஈரக் கேசத்துடன்தான் வேலைக்குச் செல்கிறேன்' என்கிறார்.

With her Dad Trump
With her Dad Trump
www.instagram.com/ivankatrump
`என் தந்தை மீண்டும் அதிபரானால் வெள்ளை மாளிகையில் இருக்க மாட்டேன்!’ - இவான்கா ட்ரம்ப்

2014-ல் பார்ச்சூன் பிசினஸ் பத்திரிகையில் 40 வயதுக்கு உட்பட்ட சிறந்த 40 தொழிலதிபர்களில் இவான்கா 33-வது இடம்பிடித்தார். அதன் அடுத்த வருடமே உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) இவரை 'யங் குளோபல் லீடர்' என்று அழைத்தது. இத்தனை படிக்கட்டுகளைத்தாண்டித்தான், இவான்கா இன்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவியில் அமர்ந்திருக்கிறார். ஆனால், இந்தப் பணிக்காக இதுவரை எந்த ஊதியமும் பெற்றுக்கொள்ளவில்லை என்கின்றன வெள்ளை மாளிகையின் பதிவுகள்.

இவான்கா ட்ரம்ப் ஓர் இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர்தான்!

அடுத்த கட்டுரைக்கு