Published:Updated:

``ஆள்கடத்தல் குற்றங்களில் தமிழகம் முதலிடம்!”- அதிரவைக்கும் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை

ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
News
ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்

2014 முதல் ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்களின் உச்சமாக, மிகக் கொடுமையான வகையில் ஆள்கடத்தல் சம்பவங்கள் உலக அளவில் நடந்தேறி வருகின்றன. இந்தியாவில் ஆள்கடத்தல் சம்பவங்களில் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கட்டாயப் பணியாளர்கள், கொத்தடிமைகள், பாலியல் சுரண்டல்கள், கட்டாய உடலுறுப்புத் தானம், ஆயுதம் தரித்த போராளிகள் என இப்படியான பல வன்முறைகளுக்கு மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆள்கடத்துதல் தொடர்பான குற்றங்கள் அதிகளவில் பதிவாகியிருந்தாலும், அவை வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை. 2014 முதல் ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேசியக் குற்ற ஆவணப் பாதுகாப்பகத்தின் அறிக்கையின்படி, 2016-ம் ஆண்டில் ஆள்கடத்தல் தொடர்பாக 8,132 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 434 வழக்குகளுடன் ஆள்கடத்தல் தொடர்பான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்துள்ளது. மேலும், 2013-ம் ஆண்டில் மட்டும் 549 வழக்குகள் ஆள்கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் தொடர்பான குற்றங்கள் வழக்குகளாகப் பதிவுசெய்யப்படாமல் இருப்பதாகக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் சொல்கின்றன.

ஆள்கடத்தல்
ஆள்கடத்தல்

குறிப்பாக, இவற்றில் 9,000-க்கும் மேற்பட்டவை 18 வயதுக்குக் குறைவான பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆள்கடத்தல் தொடர்பாகப் பாதிக்கப்படுவதில் 71 சதவிகிதத்தினர் பெண்களும் குழந்தைகளுமாகவே இருக்கின்றனர். பாலியல் சீண்டல்களுக்குப் பெண்கள் உள்ளாக்கப்படுவதோடு, கட்டாயத் திருமணம், பெண் சிசுக்கொலை, பாலின பிறப்பு விகிதம் சரிவு, கடல்கடந்த திருமணங்கள் ஆகியவை இவற்றோடு தொடர்புடையவையாக இருக்கின்றன.

ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்

இந்தியாவில் 1,000-ல் 6 பேர் ஆள்கடத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக 2018-ம் ஆண்டுக்கான உலகளாவிய அடிமைகள் குறியீட்டுக் கணக்கெடுப்பில் (Global Slavery Index) தெரிவிக்கப்பட்டுள்ளது. 167 நாடுகள் இடம்பிடித்துள்ள இந்தக் கணக்கீட்டில் இந்தியா 56-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சமூக ஆர்வலர் திரிபுரசுந்தரி கூறுகையில், ``முதலாளிகளிடம் கடன் வாங்கியவர்கள் தங்கள் கடனை அடைப்பதற்காக, கொத்தடிமைகளாகக் குடும்பத்தோடு பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படிச் செல்வோருக்கு அம்மாநில மொழி தெரியாததால், சுரண்டலுக்கு எதிராக உதவிகோர யாரையும் அணுக இயல்வதில்லை. இவர்கள், முன்னர் வாங்கிய தொகையை அடைத்தபோதிலும், இரண்டாம்கட்ட தரகர்களால் இவர்களின் ஏ.டி.எம் அட்டைகள் பறித்துவைத்துக் கொள்ளப்படுகிறது. காஞ்சிபுரம் அருகே 1,000 ரூபாய் கடன் பெற்றதற்காக 10 வருடங்களாக நிலங்களில் கொத்தடிமை வேலை செய்துவந்த முதியவர் இதற்கு உதாரணம். உழைப்புச் சுரண்டலோடு இல்லாமல், அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, உயிர்க் காப்பீடு போன்றவற்றின் மூலமும் வருவாயைத் தேடிக்கொள்கின்றனர்.''

ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
ஆள்கடத்தல் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம்

``உடலுறுப்புகளைக் கட்டாயமாகப் பறிக்க பெரிய அளவில் மாஃபியா கும்பல்கள் சர்வதேச அளவில் இயங்கி வருகின்றன. ஆள்கடத்தலுக்கு எதிரான சட்டப்பிரிவு 370, ஒருசில குறைபாடுகளைக் கொண்டுள்ளது என வாதிட்டாலும், சுரண்டல் தொடர்பான 43 சட்டங்களை இது விவாதிக்கிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான கட்டாயப் பணியாளர் தடைச் சட்டமும் இதை உறுதிசெய்கிறது. தமிழகத்தில் ஆள்கடத்தல் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து வழக்குகள் பதிந்துள்ளதை நாம் பாஸிட்டிவாகத்தான் பார்க்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, வழக்கறிஞரும் மனித உரிமைகள் ஆர்வலருமான சுதா ராமலிங்கம் கூறுகையில், ``முதலாளித்துவச் சமூகத்தில் சாதாரணமாக இந்தக் குற்றங்கள் கருதப்படுகின்றன. சமூகப் பொருளாதாரச் சமத்துவம் வாய்ந்த சமூகம் பிறக்கும்வரை இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். குற்றவாளிகள் பலம் பொருந்தியவர்களாகவும், அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவும் இருப்பதால் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

சுதா ராமலிங்கம்
சுதா ராமலிங்கம்

ஆள்கடத்தல் மற்றும் சுரண்டல் குற்றங்களைத் தடுப்பதற்காகக் குழந்தைகள் நல வாரியம், மகளிர் நல வாரியம், தொழிலாளர் நல வாரியம் எனப் பல அமைப்புகள் இருந்தாலும், குற்றங்களைக் கண்காணித்து தண்டனை பெற்றுத் தர முன்வருவதில்லை. ஏட்டுச் சுரைக்காய்போலச் சட்டங்கள் இருக்கும்போது, அவற்றை பயன்படுத்தாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைப்பது கடினம்தான்” என்றார்.