Published:Updated:

`மெலனியா ட்ரம்ப்புக்கு ஸ்லோவேனியாவில் சிலை!’ - தீ வைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்

மெலனியா ட்ரம்ப்
மெலனியா ட்ரம்ப் ( ட்விட்டர் )

``வாஷிங்டனில் உள்ள மெலனியா ட்ரம்ப்பின் அலுவலகத்திடம் இந்த பிரச்னை தொடர்பாகக் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுதொடர்பாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.”

அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப்பின் சிலை ஒன்று அவரது சொந்த நாடான ஸ்லோவேனியாவில் உள்ள செவ்னிகா பகுதியில் நிறுவப்பட்டது. இந்தச் சிலை மரத்தினால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மெலனியாவின் சிலையை நிறுவிய அடுத்தநாளே சிலர் அதை சேதப்படுத்தினர். மேலும், அந்தச் சிலைக்கு தீயும் வைத்துள்ளனர். இதனால், சிதைந்த நிலையில் இருந்த மெலனியா ட்ரம்ப்பின் சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலை
சிலை
RT

பெர்லினை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க கலைஞரான பிராட் டௌனி என்பவர் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், ``மெலனியா ட்ரம்ப்பின் சிலை அமெரிக்க அரசியல் நிலைமை குறித்த உரையாடலை வளர்க்கும் என நம்பினேன். ஆனால், அவர்கள் ஏன் இந்தச் சிலையை சேதப்படுத்தினார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். இதுதொடர்பாகக் காவல்துறையினரிம் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்தார். குடியேற்றத்தைக் குறைப்பதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப்பை மணந்த புலம்பெயர்ந்தவரான மெலனியா ட்ரம்ப்பின் நிலையை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

`மகிழ்ச்சி வகுப்புகள் நல்ல மாற்றம் தரும்!'- மெலனியா விசிட்டால் கவனம்பெறும் டெல்லி கல்வித்திட்டம்

வாஷிங்டனில் உள்ள மெலனியா ட்ரம்ப்பின் அலுவலகத்திடம் இந்தப் பிரச்னை தொடர்பாகக் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. சமீபகாலமாக அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் அல்லது சேதப்படுத்தும் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வந்தார். இன நீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் அந்நாட்டில் அதிகரித்ததை அடுத்து ட்ரம்ப் இவ்வாறு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் மனையின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மெலனியா ட்ரம்ப்
மெலனியா ட்ரம்ப்

காவல்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் அலெங்கா ட்ரேனிக், ``மெலனியா ட்ரம்ப் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அதிகமான தகவல்களை எங்களால் தற்போது வெளியிட முடியாது” என்று கூறியுள்ளார். ஸ்லோவேனியா தனி நாடாக அறிவிக்கப்பட்டபோது மெலனியா குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 50 வயதான மெலனியா ட்ரம்ப் தற்போது மாடலிங் துறையில் ஈடுப்பட்டவர். 2005-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப்பை மணந்துகொண்டார்.

`ஜம்ப்சூட், இடையில் `சாஷ்', பிரின்டட் மிடி..!’ - இந்திய விசிட்டில் மெலனியா ட்ரம்ப்பின் மிடுக்கு
அடுத்த கட்டுரைக்கு