Published:Updated:

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா

பிரதமர் ட்ரூடோவுக்கு உடல்நலம் நன்றாக இருப்பதுடன், கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

பிரதமர் ட்ரூடோவுக்கு உடல்நலம் நன்றாக இருப்பதுடன், கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
கொரோனா

கொரோனா வைரஸால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்தினர், வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி கனடா பிரதமரின் மனைவி உட்பட பல நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, வைரஸ் தொற்றின் தீவிரத்தன்மையைக் காட்டுகிறது.

கனடா பிரதமரின் மனைவி சோஃபி கிராகோயர் ட்ரூடோவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழா ஒன்றில் கலந்துகொள்ளவதற்காக லண்டன் சென்ற சோஃபி கிராகோயர் ட்ரூடோவுக்குப் புதன்கிழமை நண்பகலிலேயே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் பயணத்தைப் பாதியில் முடித்துவிட்டு கனடா திரும்பிய சோஃபி கிராகோயர், வியாழன் அன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என கனடா பிரதமரின் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியுடன்
ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவியுடன்

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சோஃபி, `வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் நான் எப்படி இருக்கிறேன் என என்னைக் கேட்க அணுகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையால் அசெளகரியமாக உணர்ந்தாலும், மீண்டும் நிலை பெறுவேன்' என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோயின் தாக்கத்தால் நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, கொரோனா மற்றும் பிற கடுமையான சுகாதாரப் பிரச்னைகளைச் சந்திக்கும் கனடா குடிமக்களைவிட பெரிய விஷயம் ஒன்றுமில்லை எனவும் சோஃபி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் ட்ரூடோவுக்கு உடல்நலம் நன்றாக இருப்பதுடன், கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ட்ரூடோ தனது மனைவியிடமிருந்து இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகச் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

ஈரானில் சுமார் 10,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 429 பேர் இறந்தும் உள்ளனர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில், ஈரான் அதிபரின் தனி ஆலோசகர் அலி அக்பர் வேலயாட்டிக்குக் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, அவரை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக அந்த நாட்டு ஊடகமான தாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 74 வயதான வேலயாட்டிக்கு மருத்துவர்கள் சில மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைத்துள்ளதாகவும், மேலும் அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரம் காட்டிவரும் கொரோனா வைரஸால், ஐரோப்பியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரீமியர் லீக் கால் பந்தாட்டப் போட்டி நடக்குமா எனும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இதனிடையே ஆர்சனல் ஐரோப்பிய கால் பந்தாட்டக் கிளப் மேலாளர் மைக்கேல் ஆர்டெட்டாவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அர்செனல் பயிற்சி மைதானங்களை மூடியதுடன் அர்டேட்டாவுடன் தொடர்பு வைத்திருந்த கிளப் ஊழியர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் சனிக்கிழமை பிரிங்ட்டன் அணியுடன் அமெக்ஸ் மைதானத்தில் மோத இருந்த அர்செனல் அணி, அர்டேட்டாவின் கொரோனா வைரஸ் உறுதிக்குப் பிறகு போட்டியை நிறுத்து வைப்பதாக அறிவித்துள்ளது.

`ஜஸ்டின் ட்ரூடோ மனைவி முதல் ஈரான் அதிபரின் ஆலோசகர் வரை..!' -தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா

இந்நிலையில், பிரீமியர் லீக் போட்டிகளின் அடுத்த கட்ட நிலையை விவாதிப்பதற்காக இன்று பிரீமியர் லீக் கால்பந்தாட்ட உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அர்செனல், ``பொது மக்களின் ஆரோக்கியம்தான் எங்களின் முன்னுரிமை, அங்குதான் எங்கள் கவனம் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism