Published:Updated:

'வெள்ளை மாளிகைக்கு உண்மையான நண்பன் இந்தியா'- ஹூஸ்டன் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்!

இந்திய நேரப்படி சரியாக 8:30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

Modi
Modi

`ஹௌடி மோடி’ நிகழ்ச்சிதான் இன்றைய டிரண்டிங். 50 ஆயிரம் இந்திய - அமெரிக்கர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார் என்ற செய்தியை அறிந்தவர்கள், `மோடி என்ன பேசப்போகிறார்’ என ஆவலுடன் எதிர்நோக்கினர். இரண்டாவது முறையாக பதவி ஏற்றப்பின், முதல்முறையாக அமெரிக்கா சென்றிருக்கிறார். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் டாப் 10 நகரில் ஒன்று ஹூஸ்டன் நகர். இது தொடர்பாக அவர், ``அமெரிக்காவின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது. ஹூஸ்டன் நகருக்கு வந்துவிட்டு எரிசக்தித் துறை குறித்து ஆலோசிக்காமல் இருக்க முடியாது'' என்று பதிவிட்டிருந்தார்.

modi howdi
modi howdi

`Howdy Modi' நிகழ்ச்சியில் மோடி!

என்.ஆர்.ஜி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார். அங்கு ஏராளமான அமெரிக்க வாழ் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இதில் கலந்துகொண்டார். டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் அமைப்பான டெக்சாஸ் இண்டியா போரம் (Texas India Forum) தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய நேரப்படி சரியாக 8:30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கி 1மணி நேரத்துக்கும் மேலாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10 மணி அளவில் பிரதமர் மோடி மேடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அமெரிக்க வாழ்தமிழர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். மேடையில் நின்றிருந்த தலைவர்களுடன் கைகுலுக்கினார்.

modi
modi

நிகழ்ச்சியில் பேசிய மோடி, " குட் மார்னிங் ஹூஸ்டன். அமெரிக்க நண்பர்களே, டிரம்புக்கு அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். உலக அரசியலை தீர்மானிப்பவராக இருக்கிறார் டிரம்ப். ஒவ்வொரு வீட்டில் உள்ளவருக்கும் தெரிந்தவர். அவரை மேடைக்கு அழைப்பதில் பெருமை கொள்கிறேன் எனக் கூறி மேடைக்கு அழைத்தவர், ஒவ்வொரு முறையும் டிரம்பை சந்திக்கும்போத உற்சாகம் வருகிறது. நட்பை பாராட்டக்கூடியவராக, அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கவராக மாற்றியவர் டிரம்ப். அமெரிக்க நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார். எளிதாக அணுகக்கூடிய அதிபராக டிரம்ப் இருக்கிறார்.

வெள்ளை மாளிகைக்கு இந்தியா உண்மையான நட்புடன் இருந்து வருகிறது. அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என டிரம்ப் கூறினார். இரு நாடுகளுக்கான நட்புறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டு இருப்பது சிறப்புக்குரியது. இந்த சந்திப்புமூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.2017 ல் என்னை அவரது குடும்பத்திற்கு அறிமுகம் செய்தார் டிரம்ப். இப்போது நான் எனது குடும்பத்தை (இந்தியர்களை) அவருக்கு அறிமுகம் செய்கிறேன்." என்றார்.