Published:Updated:

சுற்றிவளைத்த சிறுத்தைகள்.. நடுவே சிக்கிய மான்.. கேமராவில் சிக்கிய வைரல் `சர்வைவல்' போட்டோஸ்

சிறுத்தைகளின் நடுவே சிக்கியிருக்கும் மான்
சிறுத்தைகளின் நடுவே சிக்கியிருக்கும் மான்

புகைப்படத்தில் பதிவான காட்சிகள் ஒரு கதையைப் போலச் சிறுத்தைகள் வேட்டையாட முற்படுவதை விளக்குகிறது. சிறுத்தைகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் மானின் புகைப்படங்கள் சிறிய பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

காடுகளிலுள்ள விலங்குகள் உணவுக்காக ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது இன்றியமையாதது. இந்த வகையில், கென்யாவில் உள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் சிறுத்தைகள் வேட்டையாட முயன்ற மான் ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்து ஓடியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மானைத் துரத்தும் சிறுத்தை
மானைத் துரத்தும் சிறுத்தை

கென்யாவிள்ள நபோயிஷோ என்ற விலங்குகள் காப்பகத்தில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில், `இம்பாலா' என்ற ஆப்பிரிக்கச் சிறுமான் வகையைச் சேர்ந்த விலங்கும் அடங்கும். இந்த மான் வகை மிகவும் வேகமாக ஓடக்கூடியது. 160 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளவை. நான்கு அடி உயரத்தில் வளரக்கூடியவை. அவற்றிற்கு நேர்த்தியான சுழல் கொம்புகளும் உள்ளன. எச்சரிக்கை உணர்வு மிக்க ஒன்றாகவும் இந்த மான் வகைகள் அறியப்படுகின்றன. அதிக உயரம் தாவிக்குதிக்கும் திறன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`பொருளாதார நெருக்கடி; உணவுப் பற்றாக்குறை!’ -மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்து உயிர்விட்ட சிங்கம்

நபோயிஷோ காப்பகத்தில் வசிக்கும் இந்த வகை மான் ஒன்றை நான்கு குட்டி சிறுத்தைகள் மற்றும் அதன் தாய் சிறுத்தை இணைந்து வேட்டையாட முயன்றது. இதை, இங்கிலாந்தின் செல்டன்ஹாம் எனும் நகரத்தைச் சேர்ந்த 53 வயதான கெவின் ரூனே என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார். புகைப்படத்தில் பதிவான காட்சிகள் ஒரு கதையைப் போல சிறுத்தைகள் வேட்டையாட முற்படுவதை விளக்குகிறது. சிறுத்தைகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் மானின் புகைப்படங்கள் சிறிய பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

மானின் தலையைப்  பிடித்திருக்கும் தாய் சிறுத்தை
மானின் தலையைப் பிடித்திருக்கும் தாய் சிறுத்தை

புகைப்படங்களைப் பார்க்கும்போது.. செலன்கெய் என்று அழைக்கப்படும் தாய் சிறுத்தையானது இம்பாலாவின் கழுத்துப் பகுதியைப் பிடித்து தரையில் சாய்க்க முயற்சி செய்கிறது. பின்னர், அதன் குட்டிகளும் வேட்டையில் இணைந்து மானைச் சுற்றி தாக்குதல் நடத்தி தரையில் சாய்க்க தாய் சிறுத்தைக்கு உதவி செய்கிறது. தனது உடலைச் சுற்றி நிற்கும் சிறுத்தைகளைப் பின்னங்கால்களால் உதைத்து சிறுத்தைகளை விரட்ட முற்படுகிறது. சில மணித்துளிகளில் அவற்றை உதறித் தள்ளிவிட்டு தப்பி ஓட மான் முயற்சி செய்கிறது. எனினும், சிறுத்தைகள் விடாமல் மானைத் துரத்துகின்றன. இவற்றை புகைப்படத் தொடராக ரூனே வெளியிட்டுள்ளார்.

Vikatan

புகைப்படங்களை எடுத்த ரூனே பேசுகையில், ``நாங்கள் எங்களுடைய வனவிலங்குகள் வழிகாட்டியுடன் சென்று கொண்டிருந்தோம். அப்போது, இம்பாலா மற்றும் சிறுத்தையைப் பார்த்தோம். சிறுத்தை வேட்டையாடப் போகிறது என எங்களுடைய ஆறாவது அறிவு கூறியது. நினைத்தது போலவே சிறிது நேரத்தில் தாய் சிறுத்தை அந்த மானை வேட்டையாடச் சென்றது. சிறுத்தையின் எல்லைக்குள் இருந்த மானை உறுதியாகப் பிடித்தது. ஆனால், மானும் விடாமல் உறுதியாக நின்றுகொண்டிருந்ததால் அதனால் வீழ்த்த முடியவில்லை. தப்பியும் ஓடியது" என்றார்.

தப்பி ஓடும் மான்
தப்பி ஓடும் மான்

ரூனே, தனது வாழ்நாளில் ஒருமுறை புகைப்படத்தை எடுத்தாலும் அதில் சீரியஸான செய்தி இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர். ``உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவே நான் விரும்புகிறேன். குறிப்பாக ஆபத்திலிருக்கும் விலங்குகளைக் காட்சிப்படுத்த என்னுடைய சிறந்த உழைப்பைக் கொடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு