Published:Updated:

ரத்தத்தால் சிவக்கும் நிலம்!

மியான்மர் ராணுவம்
பிரீமியம் ஸ்டோரி
மியான்மர் ராணுவம்

அதிகாரத்தைக் கைப்பற்றி யதற்கு அந்நாட்டின் ராணுவம் சொல்லும் முக்கிய காரணம், அங்கே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தல் நியாயமாக நடத்தப்பட வில்லை என்பதுதான்.

ரத்தத்தால் சிவக்கும் நிலம்!

அதிகாரத்தைக் கைப்பற்றி யதற்கு அந்நாட்டின் ராணுவம் சொல்லும் முக்கிய காரணம், அங்கே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தல் நியாயமாக நடத்தப்பட வில்லை என்பதுதான்.

Published:Updated:
மியான்மர் ராணுவம்
பிரீமியம் ஸ்டோரி
மியான்மர் ராணுவம்
‘Everything will be okay’ (எல்லாம் சரியாகிவிடும்) என்ற வாக்கியம் பதித்த டி-ஷர்ட்டைப் போராட் டத்துக்கு அணிந்து வந்திருந்தாள் அந்த 19 வயதுப் பெண். அந்தப் படம் இணையத்தில் வைரலானது. அதனுடன் “நாங்கள் ஓடமாட்டோம்”, “ரத்தம் மேலும் இங்கே சிந்தக் கூடாது” என்பன போன்ற கோஷங்கள் இணைக்கப்பட்டன. ஆனால், அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் களில் அந்தப் பெண்ணும் ஒருவள். அவள் பெயர் - ஏஞ்சல் (எ) கியால் சின்.
மியான்மர் ராணுவம்
மியான்மர் ராணுவம்

பிப்ரவரி 1. மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஆங் சான் சூகி கட்சியின் அரசு ராணுவ சதியால் வீழ்த்தப்பட்டது. 50 வருடங்களுக்கும் மேலாக மியான்மரை ஆண்டுவந்த ராணுவத்தின் இரும்புக்கரங்கள், மீண்டும் ஒருமுறை அதிகாரத்தை இறுக்கிப் பிடித்தன, புதிதாக அங்கே பூத்த ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டது. இதற்கு எதிராக கடந்த ஒரு மாதமாகவே அங்கே பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களில் சாலைகளில் திரண்டு, ராணுவ அடக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்றனர்.

கியால் சின்
கியால் சின்

ராணுவ அதிகாரம் கருணையின்றி உயிர்களைக் குடித்த முதல் தாக்குதல் பிப்ரவரி 28-ம் தேதி நிகழ்ந்தது. 18 பேர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இப்படியான கொடூரத் தாக்குதலிலிருந்து மீள்வதற்குள்ளாகவே கடந்த மார்ச் 3-ம் தேதி 38 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இறந்த 38 பேரில், 4 குழந்தைகள். ரேடியோ ஃப்ரீ ஆசியா வெளியிட்ட ஒரு செய்திப்படி, ராணுவ வீரர்கள் போகும் வழியில் ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டு, எதுவுமே நடக்காதவாறு அந்தப் பிணத்தை ஒரு டிரக்கில் ஏற்றிவிட்டு தங்களின் பயணத்தைத் தொடர்ந்தி ருக்கின்றனர். சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், பல இளைஞர்கள் தங்களின் தலையில் கைவைத்தவாறே ராணுவ டிரக்குகளினுள் ஏறிக் கொண்டிருப்பதாய் காட்சிகள் விரிகின்றன. நாடு முழுவதும் இதுவரை 1,700 பேர் சிறைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மின் ஆங் லயிங்-ஆங் சான் சூகி
மின் ஆங் லயிங்-ஆங் சான் சூகி

அதிகாரத்தைக் கைப்பற்றி யதற்கு அந்நாட்டின் ராணுவம் சொல்லும் முக்கிய காரணம், அங்கே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தல் நியாயமாக நடத்தப்பட வில்லை என்பதுதான். அந்தத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றிபெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அங்கிருக்கும் தேர்தல் ஆணையமும் இது நியாயமாக நடந்த தேர்தல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. ஆனால், தற்போது அதிகாரத்தைப் பிடித்திருக்கும் கலகக்கூட்டத்தின் தலைவரான சீனியர் ஜெனரல் மின் ஆங் லயிங் (Min Aung Hlaing) மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். வெளியுலகத் தொடர்பின்றிச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 75 வயதான ஆங் சான் சூகி, சமீபத்தில்தான் முதன்முறையாக ஒரு வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராகியிருக்கிறார்.

மியான்மரில் வசிக்கும் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாத அசாதாரண சூழல். மியான்மரிலேயே பிறந்து அங்கேயே வாழவேண்டி யவர்களோ சர்வதிகாரத்தையும் மரணங்களையும் தொடர்ந்து சந்திக்க வேண்டிய சூழல். எப்போது மலரும் ஜனநாயகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism