Published:Updated:

மியாமி:`திடீரென இடிந்து விழுந்த 12 மாடிக் கட்டடம்; மீட்புப் பணிகள் தீவிரம்!'

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 12 மாடிக் கட்டத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கடற்கரை நகரமான மியாமியில் அமைந்துள்ள 12 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி, வியாழக்கிழமை அதிகாலை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவன் உட்பட 35 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டடம் இடிந்து விழும்போது அதில் பலர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுவதால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மியாமி
மியாமி
மியாமி:`திடீரென இடிந்து விழுந்த 12 மாடிக் கட்டடம்; மீட்புப் பணிகள் தீவிரம்!'

கடற்கரை நகரமான மியாமியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டத்தில் தற்போது பராமரிப்பு நடைபெற்றுவந்த நிலையில், இந்த திடீர் விபத்து அரங்கேறியுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த 12 மாடிக் கட்டடத்தில் 130 குடியிருப்புகள் இருந்ததால், இன்னும் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டட விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்ட ஃபுளோரிடா மாகாண கவர்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைத் துரிதமாகச் செய்து கொடுக்கவும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மியாமியில் அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் தொடர்ந்து மோப்ப நாய், ட்ரோன் உள்ளிட்டவற்றின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு