Published:Updated:

‘ரசிக்கும் வரை அழகு; நெருங்கினால் ஆபத்து!’- கவர்ந்திழுக்கும் ஸ்பெயினின் மாண்டி நேமே ஏரி

ராம் பிரசாத்

நீல நிறத்துடன் காட்சியளிக்கும் இந்த ஏரி, புகைப்படப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

மாண்டி நேமே ஏரி
மாண்டி நேமே ஏரி ( instagram/Óscar Avilés )

‘மாண்டி நேமே’, ஸ்பெயினில் உள்ள அழகான மற்றும் ஆபத்தான ஏரி. சுற்றுலாவாசிகளுக்கும் புகைப்படப் பிரியர்களுக்கும் இந்த ஏரி பரிட்சயம். இந்த ஏரி, டங்கஸ்டன் தாது சுரங்கத்துடன் இணைப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏரியில் உள்ள நீர், நீல நிறத்துடன் காட்சியளிக்கிறது. தாது சுரங்கத்துடன் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளதால், நச்சுத்தன்மை கலந்து காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 மாண்டி நேமே ஏரி
மாண்டி நேமே ஏரி
instagram/Selección natural

சுரங்கத்துக்கு நடுவே நீல நிறத்துடன் காட்சியளிக்கும் இந்த ஏரி, புகைப்படப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ஸ்மார்ட் போன்களில் போட்டோ ஃபில்ட்டர்களில் எடிட் செய்து புகைப்படத்தைப் பதிவேற்றும் இளைஞர்களுக்கு, இந்த ஏரியின் அழகு லக்கி பிரைஸ் போலத்தான். தூரத்தில் இருந்து பார்க்கும் வரை இந்த ஏரி அழகுதான். நெருங்கினால்தான் ஆபத்து.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களின் லைக்ஸை அள்ள நினைப்பவர்கள், ஏரியில் இறங்கி வித்தியாசமான முறையில் புகைப்படங்களை எடுக்க ஆசைப்பட்டு, இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

ஏரி
ஏரி

பொதுமக்கள் இந்த ஏரியில் இறங்குவதால், தோல் அரிப்பு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஏரியில் இறங்குவதைத் தவிர்க்குமாறு உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஏரியில் இறங்கியதால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளையும் சிலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.