Published:Updated:

சீனாவின் ஜீரோ கோவிட் இலக்கு: பாதிக்கப்பட்டால் இரும்புப்பெட்டிகளில் அடைக்கும் அரசு?!-அதிர்ச்சி வீடியோ

சீனா ஜீரோ கோவிட் இலக்கு
News
சீனா ஜீரோ கோவிட் இலக்கு

சீனாவின் ஜீரோ கோவிட் இலக்கால் மக்கள் இரும்பு கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி வருகிறது!

`கொரோனா தொற்று இல்லாத நாடு’ என்ற இலக்கை நோக்கி சீனா நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்காக சீனாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டாலும், அவர் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாராம்.

கோவிட்-19
கோவிட்-19

அடுத்த மாதம் சீனா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்நிலையில் ஜீரோ கோவிட் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களை இரும்பு கன்டெய்னர்களில் அடைத்திருப்பதாகவும் சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பான தகவல்களை சீனா உறுதிசெய்யவோ, மறுக்கவோ இல்லை. சிறிய பெட்டி போன்ற இரும்பிலான ஓர் இடம். அதில் மரத்தாலான கட்டில், ஒரு கழிவறை. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவரை இதில் அடைத்துவிடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என எந்தவிதப் பாரபட்சமும் இன்றி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாள்கள் வரை வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சீனாவில் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே வர பயந்து வீடுகளுக்குள் அடைந்துகிடக்கின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதையொட்டி, சீனாவின் இந்தச் செயலுக்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.