Published:Updated:

'ஒரே பிரசவத்தில் பிறந்த என் ஒன்பது குழந்தைகளுக்கு ஒரு வயது, யாவரும் நலம்!' - நெகிழும் தந்தை

குழந்தை ( சித்திரிப்புப் படம் )

மேற்கு ஆப்பிரிக்காவில், ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றார் 26 வயதான ஹலிமா சிஸ்ஸே. 2021-ம் ஆண்டு மே மாதம் 4 -ம் தேதி ஹலிமாவுக்கு அறுவை சிகிச்சை முலமாகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வயதாகிறது.

'ஒரே பிரசவத்தில் பிறந்த என் ஒன்பது குழந்தைகளுக்கு ஒரு வயது, யாவரும் நலம்!' - நெகிழும் தந்தை

மேற்கு ஆப்பிரிக்காவில், ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றார் 26 வயதான ஹலிமா சிஸ்ஸே. 2021-ம் ஆண்டு மே மாதம் 4 -ம் தேதி ஹலிமாவுக்கு அறுவை சிகிச்சை முலமாகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வயதாகிறது.

Published:Updated:
குழந்தை ( சித்திரிப்புப் படம் )

ஒரு வருடத்துக்கு முன்பு, ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகள், தற்போது ஒரு வயதான நிலையில் மிகவும் நலமுடன் உள்ளதாக அவர்களின் அப்பா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஒன்பது குழந்தைகளுடன் பெற்றோர்
ஒன்பது குழந்தைகளுடன் பெற்றோர்

ஒரே நேரத்தில் நான்கு கரு தங்கினாலே, கருக்கலைப்பு செய்ய சில நாடுகளில் சட்டபூர்வ அனுமதியுண்டு. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால் சில அரசுகள், இந்த வகையான கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கி உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில், ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றார் 26 வயதான ஹலிமா சிஸ்ஸே. 2021-ம் ஆண்டு மே மாதம் 4 -ம் தேதி ஹலிமாவுக்கு அறுவை சிகிச்சை முலமாகப் பிறந்த ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வயதான நிலையில், அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார், குழந்தைகளின் தந்தை அப்தெல் காதர் அர்பி. ஒரே பிரசவத்தில் அதிக எண்ணிக்கையில் பிறந்து ஆரோக்கியத்துடன் வாழும் குழந்தைகள் என இக்குழந்தைகள், கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே, ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பது என்பது இதற்கு முன் இரு முறை நடந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் உயிரோடு நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது குழந்தைகளுடன் பெற்றோர்
ஒன்பது குழந்தைகளுடன் பெற்றோர்

குழந்தைகளின் தந்தை, மாலி ராணுவத்தில் பணிபுரிகிறார். மொராக்கோவில் உள்ள மருத்துவமனையில் பிறந்து இந்தக் குழந்தைகள் தற்போது அங்கேயே பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகளின் அம்மா அர்பி, "இது எளிமையான விஷயம் அல்ல, மிகவும் சிறப்பானது. சில நேரங்களில் சோர்வாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது, மிகவும் நிம்மதியாக இருக்கிறது. சிரமங்களை எல்லாம் மறந்து விடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism