Published:Updated:

உக்ரைன்: `ரஷ்யப்படைகள் பின்வாங்குவதுபோலக் காண்பித்துக்கொண்டு முன்னேறுகின்றன' - அமெரிக்கா

உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம் ( ட்விட்டர் )

`ரஷ்யா சொன்னது தவறான தகவல் என்று இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது' - அமெரிக்கா.

உக்ரைன்: `ரஷ்யப்படைகள் பின்வாங்குவதுபோலக் காண்பித்துக்கொண்டு முன்னேறுகின்றன' - அமெரிக்கா

`ரஷ்யா சொன்னது தவறான தகவல் என்று இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது' - அமெரிக்கா.

Published:Updated:
உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம் ( ட்விட்டர் )

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர்ப் பதற்றம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தங்கள் படைகளில் ஒரு பகுதியைத் தாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், போர் செய்வதற்கு விரும்பவில்லை என்றும் ரஷ்யா தரப்பிலிருந்து தகவல் வெளியானது.

ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த அறிவிப்பை இன்னும் தங்கள் தரப்பு உறுதிப்படுத்தவில்லை என்று நேற்று தெரிவித்திருந்தார்.

உக்ரைன் நாட்டின் கொடி
உக்ரைன் நாட்டின் கொடி

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, ``உக்ரைன் எல்லையிலிருந்து ராணுவப் படைகளைத் திரும்பப்பெறுவதாக ரஷ்யா கூறியிருக்கிறது. அதனால், உலகம் முழுவதும் ரஷ்யா கவனம்பெற்றது. ஆனால், இது தவறான தகவல் என்று இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா
உக்ரைன் எல்லையில் ரஷ்யா
Russian Defense Ministry Press Service via AP, File

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் அருகே பயிற்சி முடித்த வீரர்கள் ரஷ்யாவுக்குத் திரும்புவதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக க்ரீமியன் தீபகற்பத்திலிருந்து படைகள் வெளியேறும் வீடியோவை வெளியிட்டது.

ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யா தனது ஒரு பகுதி வீரர்கள் பின்வாங்குவதுபோலக் காண்பித்துக்கொண்டு, முக்கியமான படைப்பிரிவுகளை எல்லையை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.