Published:Updated:

`மிரட்டிய மின்னல்; அலறியடித்து ஓடிய மக்கள்'- களேபரமான கோல்ப் மைதானம்

ராம் பிரசாத்

அமெரிக்காவில் கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்

lightning strikes
lightning strikes

`பிஜிஏ டூர் சாம்பியன் ஷிப்' கோல்ப் போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்துவருகிறது. நேற்று மாலை நடந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திடீரென வீசிய சூறைக்காற்றால் ரசிகர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறியனர். சிலர் மரங்களுக்கு கீழ் நின்றிருந்தனர். அப்போது திடீரென பயங்கரமான மின்னல் தாக்கியது. மரத்தில் மின்னல் தாக்கியதால் பசுமையாக இருந்த மரம் கருகியது. மரத்துக்கு கீழே நின்றிருந்த 6 பேர் இதில் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

`மிரட்டிய மின்னல்; அலறியடித்து ஓடிய மக்கள்'- களேபரமான கோல்ப் மைதானம்

மின்னல் தாக்கும் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் கூறுகையில், ``வீரர்கள், பார்வையாளர்கள் அனைவரின் பாதுகாப்பும் மிகவும் அவசியமானது. எங்கள் குழுவில் வானிலை ஆய்வாளர்கள் உள்ளனர். காலநிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடி, மின்னல் போன்றவை குறித்தும் நாங்கள் கண்காணிப்போம். பல முறை அதிர்ஷ்டவசமாக பெரிய சேதாரங்களில் இருந்து தப்பியுள்ளோம்.

இந்த முறை நாங்கள் அதை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்தச் சம்பவம் நடந்த பின்னர் போட்டியை ஒத்திவைத்துவிட்டோம். வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டோம்'' என்றனர்.