Published:Updated:

மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸை தொடர்ந்து நைக்... ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!

ரஷ்யா உக்ரைன் போர்

கடந்த மே மாதம் நைக் நிறுவனம் 37 ரஷ்ய கடைகளுடன் போடப்பட்டிருந்த‌ மிகப்பெரிய ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் வரிசையில் நைக் நிறுவனமும் ரஷ்யாவைவிட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸை தொடர்ந்து நைக்... ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!

கடந்த மே மாதம் நைக் நிறுவனம் 37 ரஷ்ய கடைகளுடன் போடப்பட்டிருந்த‌ மிகப்பெரிய ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் வரிசையில் நைக் நிறுவனமும் ரஷ்யாவைவிட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

Published:Updated:
ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு மாதங்கள் ஆன நிலையிலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்தப் போர் காரணமாக பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், இந்நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில், மாஸ்கோவில் நடந்த அசம்பாவிதம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனமான நைக் ரஷ்யாவில் தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

ஸ்போர்ட்ஸ்வேர்
ஸ்போர்ட்ஸ்வேர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் வரிசையில் நைக் நிறுவனமும் ரஷ்யாவை விட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்களின் ஊழியர்களைக் கருத்தில் கொள்வதால் வரும் மாதங்களில் செயல்பாடுகளைப் படிப்படியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரஷ்யாவில் நைக் நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வலைதளம் தெரிவித்துள்ளது.

Russia Ukraine war
Russia Ukraine war

நைக் நிறுவனம், ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து நிறுவனத்தின் மொத்த வருவாயில் 1%க்கும் குறைவான பங்களிப்பையே வழங்குவதாக முன்பே தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் நைக் நிறுவனம் 37 ரஷ்ய கடைகளுடன் போடப் பட்டிருந்த‌ மிகப்பெரிய ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன.

போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மேற்கத்திய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றன. இதைத் தொடர்ந்து, போரின் காரணமாக அமெரிக்க ஸ்போர்ட்ஸ்வேர் நிறுவனமான ஜைன்ட், கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் இருந்த தனக்குச் சொந்தமான கடைகளை மூடியது. தற்பொழுது ரஷ்யாவில் ஆன்லைன் ஆர்டர்களையும் நிறுத்தியுள்ளது.

Starbucks Logo
Starbucks Logo
Image by Dénnis Kendall from Pixabay

மேலும் நெட்வொர்க்கிங் நிறுவனமான சிஸ்கோ தனது செயல்பாடுகளை முழுமையாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு ஊழியர்களை பாதிக்கும் என்றும் அவர்களுக்கு நிறுவனம் நிச்சயம் உதவும் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.