Published:Updated:

வெட்டினால் ரத்தம் சிந்துமா?உலகின் தனித்துவமான மரத்தின் சிறப்பு என்ன?

Dragon Blood Tree

சுமார் 33 அடியிலிருந்து 39 அடி நீளம் வரை வளரும் இம்மரம் 650 வருடங்கள் வரை வாழும்.

வெட்டினால் ரத்தம் சிந்துமா?உலகின் தனித்துவமான மரத்தின் சிறப்பு என்ன?

சுமார் 33 அடியிலிருந்து 39 அடி நீளம் வரை வளரும் இம்மரம் 650 வருடங்கள் வரை வாழும்.

Published:Updated:
Dragon Blood Tree

மனிதனை பிரமிப்பில் ஆழ்த்த இயற்கை என்றும் தவறியதே இல்லை. கதைகளிலும் கற்பனைகளிலும், திகில் திரைப்படங்களிலும் மரங்கள் ரத்தம் சிந்துவதைக் கண்டிருப்போம். அமானுஷ்யமான நிகழ்வாகப் பலரும் இதைக் கருதி வந்த நிலையில், உண்மையிலேயே வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம் உள்ளது அறியப்பட்டுள்ளது.

Dragon Blood Tree
Dragon Blood Tree

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனித்துவமான இந்த மரத்தின் பெயர் டிராகன் பிளட் (Dragon Blood Tree). சகோடா தீவில் காணப்படும் இந்த மரம் மற்ற மரங்களைப் போல அல்லாமல், குறைந்த அளவு நீரையே வளர எடுத்துக் கொள்கிறது. வெப்பமான சூழலிலும் இந்த மரம் நன்கு வளரும். சுமார் 33 அடியிலிருந்து 39 அடி நீளம் வரை வளரும் இம்மரம் 650 வருடங்கள் வரை வாழும். மரத்தின் கிளைகள் அடர்த்தியாகவும், இலைகள் குடை போன்ற அமைப்போடும் இருக்கும்.

அனைத்தையும்விட அதிசயம், இந்த மரத்தை வெட்டினால் மரத்திலிருந்து சிவப்பு நிற பிசின் வெளிவரும். இதுவே மரத்திலிருந்து ரத்தம் வருவது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது. இந்த மரத்தின் பிசின் மக்களுக்கு உண்டாகும் காய்ச்சலில் இருந்து அல்சர் வரை குணப்படுத்துவதாக அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர்.

மனித கற்பனையை நிஜமாக்கிய டிராகன் பிளட் மரம், இயற்கையின் ஓர் ஆச்சர்யமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism