Published:Updated:

`சீன அரசைக் கொந்தளிக்க வைத்த கொரோனா செய்தி!' - மூன்று பத்திரிகையாளர்களுக்குக் கெடு

`கொரோனா' வைரஸ் அச்சம்
`கொரோனா' வைரஸ் அச்சம்

மூன்று பத்திரிகையாளர்களான ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் ஆகியோர் சீனாவிலிருநது வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.

கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தால் இதுவரை 1800-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக சீனாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நோய்த்தாக்கம் குறித்து தங்களது பத்திரிகையில் அவதூறு பரப்பும் வகையில் செய்தித் தலைப்பு வெளியிட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் மூன்று பத்திரிகையாளர்களை சீனாவிலிருந்து வெளியேற்றுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. மூன்று பத்திரிகையாளர்களுமே பீஜிங் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சீனா
சீனா

பிப்ரவரி 3-ம் தேதியிட்ட தங்களது பத்திரிகைச் செய்தியின் தலைப்பில், ``China is the real sick man of Asia" என்று பதிவு செய்திருந்தது வால் ஸ்ட்ரீட் ஜர்னல். அதில் உள்ளடங்கியிருந்த செய்தியில் சீனப் பொருளாதாரம் சரிவு நிலையில் இருப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 19 அன்று செய்தி வெளியிட்ட சீன அரசு, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை தங்களது தவற்றைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்றும் இதில் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்!' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை

இதையடுத்து இதில் தொடர்புடைய மூன்று பத்திரிகையாளர்களான ஜோஷ் ஷின், ச்சாவ் டெங், மற்றும் பிலிப் வென் ஆகியோர் சீனாவிலிருந்து வெளியேற ஐந்து நாள்கள் கெடு விதித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.

`கொரோனா குறித்த தெளிவு உங்களுக்கு இல்லை!' - சீன அதிபரை விமர்சித்த சமூக ஆர்வலர் கைது
அடுத்த கட்டுரைக்கு