Published:Updated:

டோங்கோ: கடலில் வெடித்துச் சிதறிய எரிமலையால் சுனாமி எச்சரிக்கை! - `திக் திக்’ காட்சிகள்!

எரிமலை
News
எரிமலை ( Twitter|@no_filter_Yamba )

தெற்கு பசிபிக் கடலிலுள்ள டோங்கோ தீவுகளில் அமைந்திருக்கும் கடலில் எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருகடலில் அமைந்திருக்கும் தீவு நாடு டோங்கோ. டோங்கா தீவுகளில் நீருக்கு அடியில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அன்று, அந்தத் தீவுகளை சுனாமி தாக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக டோங்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, ``சுனாமி எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேகங்கள் சாம்பல் நிறத்துடன் அந்தப் பகுதியையே மூடியிருக்கின்றன. இதன் காரணமாக மக்கள், கூட்டம் கூட்டமாக வேறு ஊர்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக Jese Tuisinu என்பவர் தனது ட்விட்டரில் `டோங்கோ தீவுகளை சுனாமி தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்’ எனப் பதிவிட்டு, அது தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிறார்.