Published:Updated:

`அமைதியை விரும்புகிறோம்; காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம்!’- மீண்டும் ட்ரம்பை அழைக்கும் பாகிஸ்தான்

அமைச்சர் குரேஷி
அமைச்சர் குரேஷி

இந்தியாவுடன் சமாதானத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இல்லை என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இல்லை என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.

அமைச்சர் குரேஷி
அமைச்சர் குரேஷி

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மது குரேஷி வாஷிங்டனிலுள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் பேசுகையில், ``அண்டை நாடுகளிடம் அமைதியான உறவை பின்பற்றுவதையே எங்கள் அரசு விரும்புகிறது. உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் எங்களது இலக்கை அடைய அமைதி தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் இந்தியாவுடன் அமைதியான உறவை நிலைநாட்ட எந்த விலையையும் கொடுக்கப்போவதில்லை. காஷ்மீர் பிரச்னையை நேர்மையான முறையில் தீர்க்கவே விரும்புகிறோம். நாட்டில் நிலவும் வறுமைக்கு எதிராக போராடுவதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையைப் பின்பற்றும் பா.ஜ.க அரசு இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது” என்றார்.

`குண்டுகள் விழும்போது பதுங்குக் குழிகளில் படிப்போம்!’- போர்ச் சூழலில் வாழும் காஷ்மீர் குழந்தைகள்

மேலும், ``அகண்ட பாரதம் மற்றும் இந்துத்துவாவை பின்பற்றுவது இந்தியாவில் உலகமே பார்க்கக்கூடிய அளவில் பேரழிவுகளை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய நிலையை மாற்ற முயன்றது, ஜனநாயக அமைப்பையும் மாற்றியது, சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் மீறியது மட்டுமல்லாமல், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களையும் மீறியுள்ளது. காஷ்மீர் மக்களை வீட்டுச் சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல் தகவல்தொடர்புகளைத் துண்டிக்கும் செயல்களையும் இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

தொடர்ந்து பேசிய அவர், ``காஷ்மீர் இந்தியாவின் உள்ளடங்கிய பகுதி என்று இந்தியா கூறுவது பாதுகாப்பு கவுன்சில் கொள்கைகளின்படி தவறானதாகும். இல்லையென்றால், பிரெஞ்ச் அதிபர், இந்தியப் பிரதமரிடம் இதுதொடர்பான கேள்விகளை ஏன் எழுப்பப் போகிறார். அதிபர் ட்ரம்ப், காஷ்மீர் தொடர்பான பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதை நாங்கள் அறிவோம். இந்தப் பிரச்னைகளில் அவர் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தால், நாங்கள் அதை வரவேற்கிறோம். அதிபர் ட்ரம்ப், தனது இலக்கை அடைவதில் வெற்றிகரமாக உள்ளார். தெற்காசிய நாடுகளில் அமைதியைக் கொண்டுவர அவர் தனது பங்களிப்பைச் செய்ய முடியும்” என்று பேசினார்.

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்

அதிபர் ட்ரம்ப், இதற்கு முன்பு காஷ்மீர் தொடர்பான பிரச்னையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் மத்தியஸ்தம் செய்ய வந்தபோது, ``இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னை இது. இதில் மூன்றாவது ஒரு நாடு மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை” என இந்தியா, அமெரிக்காவிடம் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

``குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை அமல்படுத்தப்படுவது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவிலுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராம மறைமுகமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர்” என்றும் தனது உரையில் கூறியுள்ளார்.

"சீக்கிரம் அங்கிருந்து நகருங்கள்!" - காஷ்மீர் நேரடி அனுபவக் குறிப்புகள்!
அடுத்த கட்டுரைக்கு