Published:Updated:

கொரோனா விதிமீறல்: நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

போரிஸ் ஜான்சன்

ஊரடங்கின்போது விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரத்துக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.

கொரோனா விதிமீறல்: நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

ஊரடங்கின்போது விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரத்துக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.

Published:Updated:
போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் விதிமுறைகளை மீறி, தனது மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக 2020-ம் ஆண்டு, ஜூன் 19-ம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் பிறந்தநாளையொட்டி அவருடைய அலுவலகத்தில் அதிக நபர்கள் விருந்துக்காக வந்தபோது கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க, நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பிரதமரும், அவரின் ஊழியர்களும் மீறினார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பொதுமக்கள் அவர்மீது கோபமடைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் அவர் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

இந்த விவகாரம் தொடர்பாக லண்டன் போலீஸார் சமீபத்தில் விசாரணை செய்யத் தொடங்கினர். அது தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. ஊரடங்கின்போது பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி நடந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். இது குறித்து அவர் கூறும்போது, ``என்னை மன்னிக்க வேண்டும். மக்களின் கோபத்தை நான் புரிந்துகொண்டேன. என் தவற்றுக்கு நான் வருந்துகிறேன். அதேசமயம், இதைச் சரிசெய்துகொள்வேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism