Published:Updated:

உக்ரைன்: ``குண்டு வெடிச்சுக்கிட்டே இருக்கு, எப்படியாவது காப்பாத்துங்க”-கலக்கத்தில் தமிழக மாணவர்கள்!

உக்ரைன் போர்

கிழக்குப் பகுதியில் இருக்கும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெறவில்லை. அங்கு மிக மோசமான தாக்குதல் நடந்துவருவதால் தமிழக மாணவர்கள் அச்சம்!

உக்ரைன்: ``குண்டு வெடிச்சுக்கிட்டே இருக்கு, எப்படியாவது காப்பாத்துங்க”-கலக்கத்தில் தமிழக மாணவர்கள்!

கிழக்குப் பகுதியில் இருக்கும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெறவில்லை. அங்கு மிக மோசமான தாக்குதல் நடந்துவருவதால் தமிழக மாணவர்கள் அச்சம்!

Published:Updated:
உக்ரைன் போர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்திருக்கிறது. தலைநகர் கீவ், கார்கிவ், செச்சினிவ் ஆகிய நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்துவருகிறது. தலைநகர் கீவில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எப்படியாவது வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் மாணவர்களை போலந்து, ருமேனியா நாடுகள் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகளை இந்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

ஆனால், கிழக்குப் பகுதியில் இருக்கும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெறவில்லை. ரஷ்யப் படைகளின் முதல் தாக்குதல் கார்கிவ் நகரில்தான் தொடங்கியது. குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதால், பாதுகாப்பு கருதி கடந்த 3 நாள்களாக கார்கிவ் நகர மக்கள் சுரங்க பங்கர்களில் தஞ்சமடைந்துள்ளனர். இயற்கை உபாதைகளுக்கு மட்டுமே தங்கள் அறைகளுக்குச் சென்றுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கிருக்கும் சூழல் குறித்து கார்கிவ் தேசிய மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர் ஹம்சா நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``கடந்த மூன்று நாள்களாகத் தாக்குதல் ரொம்பவே அதிகமாகியிருக்கு. விடாம குண்டு போட்டுக்கிட்டே இருக்காங்க. பங்கர்லயேதான் இருக்கோம். வெளிய போக முடியலை. எப்படியாவது ரிஸ்க் எடுத்து தப்பிச்சு பக்கத்து நகரங்களுக்குப் போயிடலாம்னு பார்த்தோம். ஆனா, ரயில் நிலையத்துக்குப் போகக்கூட வழியில்லை. எல்லா பக்கமும் பிளாக் பண்ணிவெச்சுருக்காங்க. எந்தப் போக்குவரத்தும் இல்லை. அதையும் தாண்டி நடந்தே போகலாம்னு நினைச்சா உயிருக்கு நிச்சயம் உத்தரவாதம் இல்லை. ஏன்னா அவ்வளவு தாக்குதல் நடக்குது. முன்னாடி தாக்குதல் நடந்தா, கொஞ்சம் கேப் விட்டு அடுத்த தாக்குதல் நடக்கும். ஆனா, இப்போ விடாம அட்டாக் நடந்துக்கிட்டே இருக்கு.

கையில ரெண்டு நாளுக்குத் தேவையான உணவு மட்டும்தான் இருக்கு. எங்களுக்கு இஙகேக இருக்க ரொம்ப பயமா இருக்கு. இந்திய தூதரகத்துக்கிட்ட இருந்து எந்த அறிவிப்பும் வரலை. கீவ்ல இருக்கறவங்ளை காலி பண்ணச் சொல்லியிருக்காங்க. ஆனா, கார்கிவ்ல இருக்கவங்களுக்கு எந்தத் தகவலும் வரலை. இந்திய ராணுவத்தைப் பயன்படுத்தியாவது எப்படியாவது எங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க. இங்கே இருக்குற ஒவ்வொரு நிமிசமும் எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கேரள மாணவர்களை, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வழியா கூட்டிட்டு போறதாக கேரள அரசுகிட்ட இருந்து தகவல் கொடுத்திருக்காங்க. அந்த மாதிரி ஏதாவது முயற்சி எடுத்து எங்களை எப்படியாவது இங்கே இருந்து கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க. அரசாங்கத்துக்கிட்ட எப்படியாவது இதைக் கொண்டுபோய் சேர்த்துடுங்க” என்று அச்சம் நீங்காமல் நம்மிடம் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்கிவில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தங்கிப் படித்துவருகின்றனர். தலைநகர் கீவைவிட இங்குதான் அதிக அளவில் இந்திய மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ரஷ்யா - உக்ரைன் ராணுவங்கள் மோதல் கார்கிவில் உக்கிரமாக இருப்பதால், மீட்புப்பணி நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக மாணவர் ஹம்சா
தமிழக மாணவர் ஹம்சா

இன்று காலை கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில் நிலையம் நோக்கிச் சென்றபோது, இந்திய மாணவர் ஒருவர் குண்டு வீச்சில் பலியாகியிருக்கிறார். அந்த மாணவர் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் எனத் தெரியவந்திருக்கிறது. இது இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுரங்க பங்கர்களில் தஞ்சமடைந்துள்ள மாணவர்கள்
சுரங்க பங்கர்களில் தஞ்சமடைந்துள்ள மாணவர்கள்


இந்திய அரசு, இந்திய விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் மாணவர்களை மீட்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதற்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதரகங்கள் மூலமாக இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு என்றே சர்வதேச பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். அப்படியிருக்கும்போது ராணுவ நடவடிக்கை மூலமாக இந்தியர்களை மீட்பது மட்டுமே இந்திய அரசிடமிருக்கும் ஒரே வழியாக இருக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism