Published:Updated:

`நாடு தழுவிய திடீர் மின்வெட்டு; நிலைத்தன்மையற்ற அரசு!' - நெருக்கடியில் வெனிசுலா

இருளில் வெனிசுலா! ( AP )

இதனால், அந்நாட்டு மக்கள் மிகப் பெரிய இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். உணவுத் தேவைக்காக பல லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்

`நாடு தழுவிய திடீர் மின்வெட்டு; நிலைத்தன்மையற்ற அரசு!' - நெருக்கடியில் வெனிசுலா

இதனால், அந்நாட்டு மக்கள் மிகப் பெரிய இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். உணவுத் தேவைக்காக பல லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்

Published:Updated:
இருளில் வெனிசுலா! ( AP )

தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில், பல நாள்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாடு இருளில் மூழ்கியுள்ளது. வெனிசுலாவில் மின்வெட்டு நிகழ்வது இந்த ஆண்டில் இது நான்காவது முறை. மிகப் பெரிய மின்காந்த தாக்குதலால்தான் இந்த மின்வெட்டு நிகழ்ந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. ஆனால், அரசு இதுதொடர்பாக எந்த அதிகாரபூர்வ ஆவணத்தையும் வெளியிடவில்லை. அந்நாட்டின் தொலைத்தொடர்பு அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஒரு கேள்விக்கும் முழுமையான பதிலைக் கூறவில்லை. மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் மக்கள் மிகப் பெரிய இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். உணவுத் தேவைக்காக பல லட்ச மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள 24 மாநிலங்களில் 23-ல், மார்ச் முதலே தொடர் மின்வெட்டு இருந்துவருகிறது. சில கிராமப்புறங்களில், மார்ச் மாதம் முதலே போன மின்சாரம் இன்னும் வராமல் இருக்கிறது.

வெனிசுலா
வெனிசுலா
AP

வெனிசுலாவின் முக்கிய நகரங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் சான் ஜெரோனிமோ மின் நிலையம் அமைந்துள்ள kurenai பகுதி அருகே காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், அந்நிலையத்தின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டிற்கு 8 சதவிகிதம் வரை மின்சாரம் உற்பத்திசெய்யும் சைமன் பொலிவர் நீர்மின் நிலையம் பழுதடைந்திருப்பதால் ,மின்சார தயாரிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் 90 சதவிகித தொலைத்தொடர்பு இணைப்புகள் செயல்படவில்லை. 10சதவிகிதம் மட்டும் இணையச் சேவை செயல்பாட்டில் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு, அனைத்து விதமான பொதுச் சேவைகள் மற்றும் கல்விநிலையங்களை முடக்கியுள்ளது. வெனிசுலாவை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் உறுதியான அரசு இல்லாமல் தடுமாறிவருகிறது.

சாவோஸ், தன் நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களையும் தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை, ஜியான் குயோடோ (juan guaido), அமெரிக்காவின் உதவியோடு எதிர்த்துவருகிறார். அவருக்கு 50 நாடுகள் ஆதரவாக உள்ளன. மதுரோவிற்கு சீனா மற்றும் ரஷ்ய அரசு ஆதரவு தெரிவிக்கின்றன. அந்நாட்டின் மின்தடைக்கு அமெரிக்க அரசே காரணம் என்றும் அதை விரைவில் முறியடிப்போம் என்றும் மதுரோ கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெனிசுலா அமெரிக்கத் தொடர்பின் வரலாறு:

ஒரு நாட்டில் எண்ணெய் வளம் இருந்தால் என்னென்ன களேபரங்கள் நடக்கும் என்பதற்கு வெனிசுலா சாட்சி. ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் எண்ண முடியாதபடி அந்நாட்டில் வித்தியாசம் இருந்துவந்தது. 1998-ல் மக்கள் தலைவரான ஹியுகோ சாவோஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் அமெரிக்காவை வெளிப்படையாகவே எதிர்த்தார். இது, புஷ்ஷின் அரசுக்கு ஆத்திரத்தைத் தந்தது. சாவோஸ், தன் நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களையும் தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். 2002-ல் உலகிலேயே நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ஆனது வெனிசுலா.

50 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவு பணக்கார நாடாக இருந்த வெனிசுலா, 1989-ல் சர்வதேச நிதி நிறுவனத்தின் கடுமையான விதிமுறைகளால், 1978-ல் இருந்து 2003-ம் ஆண்டு வரை தனி நபரின் வருமானம் 40 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. சாவோஸின் அமெரிக்க வெறுப்பால் புஷ் அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தது. செப்டம்பர்-11 தாக்குதலால் அமெரிக்க அரசு அவர் மீதான நடவடிக்கையைத் தள்ளிவைத்தது. 2002-ல், அந்நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் நெருக்கடிக்குள்ளானது. சவோஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அவர், தனது ஆதரவாளர்களுடன் பதவியை தக்கவைக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தார். அதை அமெரிக்க அதிபர் புஷ் கொண்டாடுவதற்குள், 72 மணி நேரத்தில் மீண்டும் அதிபர் ஆனார்.

வெனிசுலா
வெனிசுலா
AP

அதன்பிறகு, கடந்த சில வருடங்களாகவே பொருளாதார நெருக்கடியில் தவித்த வெனிசுலாவுக்கு, தொடர் மின்வெட்டு தற்போது மேலும் நெருக்கடியைத் தந்துள்ளது. ஐ.நா சபை அல்லது வேறு அண்டை நாடுகள் வெனிசுலாவிற்கு, இந்த நெருக்கடியில் இருந்து உதவ முன் வர வேண்டும் என்று சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் கருத்துத் தெரிவித்துவருகின்றன. மின்வெட்டு பிரச்னையில் இருந்து வெனிசுலா மெதுவாக மீண்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism