Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `பரவலான தடுப்பூசி விநியோகத்தை அடுத்த ஆண்டு பாதி வரை எதிர்பார்க்க முடியாது!' - WHO

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

`` தடுப்பூசி தொடர்பான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அந்த தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்”

சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸானது உலகின் பல நாடுகளிலும் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 2.63 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 8.69 லட்சம் மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா மிகவும் கடுமையான பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளை பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. அவ்வப்போது, தடுப்பூசிகள் தொடர்பான பாசிட்டிவ் செய்திகள் வெளிவந்தாலும் இந்த விஷயத்தில் குழப்பமான நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார அமைப்பு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Health workers conduct COVID-19 antigen tests in New Delhi
Health workers conduct COVID-19 antigen tests in New Delhi
AP Photo / Manish Swarup

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தடுப்பூசி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கொரோனாவுக்கான பரவலான தடுப்பூசி விநியோகத்தை 2021-ம் ஆண்டு பாதி வரை எதிர்பார்க்க முடியாது. தடுப்பூசி தொடர்பான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அந்த தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகமான நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி இந்த சோதனை நடத்தப்படும். கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரும்பான்மையான தடுப்பூசிகள் இந்த மூன்றாம் கட்ட பரிசோதனைகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், ஹாரிஸ் எந்த தடுப்பூசியின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

A vaccine volunteer receives an injection Johannesburg
A vaccine volunteer receives an injection Johannesburg
AP / Siphiwe Sibeko

தொடர்ந்து ஹாரிஸ் பேசும்போது, ``தடுப்பூசி தொடர்பான எல்லா தகவல்களையும் கட்டாயம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதிக நபர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடம், அந்த மருந்து செயல்படுகிறதா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. அதனுடைய பாதுகாப்பு திறன் குறித்தும் எந்தவிதமான தெளிவும் எங்களுக்கு இல்லை” என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து கோவாக்ஸ் திட்டம் குறித்து பேசிய அவர், ``தேவைக்கேற்ப நாங்கள் அனைவருடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். அனைவருக்கும் எளிதில் தடுப்பு மருந்து கிடைக்க வழிவகை செய்வதே கோவாக்ஸ் திட்டத்தின் நோக்கம்” என்றும் கூறியுள்ளார். 2021-ம் ஆண்டுக்குள் சுமார் 2 பில்லியன் தடுப்பூசிகளை விநியோகம் செய்வதையும் இந்த கோவாக்ஸ் திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

குரங்குகள் பற்றாக்குறையால் தடைப்பட்ட தடுப்பூசி சோதனை... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு