Published:Updated:

`அது என்னோட இரை!' - நடுக்கடலில் மீன் பிடித்தவர்களை அதிரவைத்த சுறா! #ViralVideo

ராம் பிரசாத்

அமெரிக்காவில் பொழுதுபோக்குக்காக மீன் பிடித்துக்கொண்டிருந்த குடும்பத்தினரை வெள்ளைச் சுறா ஒன்று அதிரவைத்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது!

வெள்ளை சுறா
வெள்ளை சுறா

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மசாசுசெட்ஸ்ஸில் உள்ள கேப் காட் வளைகுடா பகுதியில் தங்களது விடுமுறையைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர் அந்தக் குடும்பத்தினர். அப்போது தூண்டிலில் ஒரு மீன் சிக்க அதை வீடியோவாக படம் எடுத்தனர்.

அவர்களின் தூண்டிலில் சிக்கிய மீனை ஆர்வத்துடன் படகுக்கு இழுத்துக்கொண்டிருந்தனர். சில நொடிகளில் அந்த மீன் அவர்களின் கைக்கு கிடைக்கும் வேளையில், திடீரென தண்ணீரில் இருந்து பாய்ந்த வெள்ளை நிற சுறா, மீனை லாவகமாகக் கொண்டுசென்றது.

இதைக்கண்டதும் படகில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மீனை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு சுறா அதிர்ச்சியைக் கொடுத்தது.

படகு
படகு

இந்த வீடியோவை அட்லான்டிக் வெள்ளைச் சுறா பாதுகாப்பு அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.