Published:Updated:

`உடல் பருமனானவர்கள் சொர்க்கத்துக்குப் போகமுடியாது!’ - மதபோதகரை தள்ளிவிட்ட பெண்

ராம் பிரசாத்

மதபோதகரை இளம்பெண் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில்
பிரேசில்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மதபோதகரை தள்ளிவிடும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பிரேசிலில் மதபிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இதை லைவ் டெலிகாஸ்ட் செய்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பையும் மீறி மேடை ஏறிய பெண் ஒருவர் மதபோதகரை மேடையிலிருந்து கீழே தள்ளிவிட்டார். இதைக்கண்ட பார்வையாளர்கள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப்பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பார்வையாளர்கள் கூறுகையில், ``மதபோதகர் பேசிக்கொண்டிருந்தபோது, உடல்பருமனான பெண்கள் சொர்க்கத்துக்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறினார். இதையடுத்துதான், அந்த இளம்பெண் பாதுகாவலர்களையும் மீறி மேடைக்குச் சென்று மதபோதகரை தள்ளிவிட்டார். அவரை தள்ளிவிட்டு மேடையில் சிரித்தவாறு நின்றிருந்தார். மேலும், மேடையிலிருந்து இறங்கி மதபோதகரை நோக்கி கீழே சென்றார். அந்தப்பெண் சற்று பருமனாக இருந்தார். உடனடியாக அங்குவந்த பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மீண்டும் மேடையேறிய மதபோதகர் தனது உரையை நிறைவு செய்தார்'' எனக் கூறினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.