Published:Updated:

`தாத்தா பக்கத்துல இருந்தும், கண்ணாடி வழியாகச் சொன்னேன்' -பெண்ணின் நிச்சயதார்த்தமும் வைரல் போட்டோவும்

கொரோனோ பாதிப்பு
கொரோனோ பாதிப்பு ( Premier Living & Rehab Center Info Page )

கொரோனா வைரஸ் பாதிப்பால், ஹோமில் இருப்பவர்களைப் பார்க்க மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு. தாத்தாவை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் பயணங்கள், பொது இடத்தில் மக்கள் கூடுதல் போன்றவற்றில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் கார்லி பாயட் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை, மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் தன்னுடைய தாத்தாவுக்கு, அறையின் கண்ணாடி வழியாகக் கண்ணீருடன் தெரிவித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்!' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா
Fear of spreading of corona
Fear of spreading of corona
Freepik

இதுகுறித்து கார்லி வழங்கியுள்ள பேட்டி ஒன்றில், ``கொரோனோ மனித இனத்தை அசைத்துப் பார்த்துவிட்டது. எத்தனையோ பேர் தன் குடும்பம் அருகிலிருந்தும் அவர்களைத் தொடக்கூட முடியாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது கொடுமையானது. என் தாத்தாவுக்கு நான்தான் உலகம். என்னுடைய சின்னச் சின்ன செயல்களையும் கொண்டாடுவார். சில மாதங்களாக மறதி நோய் பாதிப்புக்குச் சிகிச்சைபெற மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

என்னுடைய திருமணம் என் தாத்தாவின் கனவு. ஆனால், எதிர்பாராத விதமாக எனக்கும் என் காதலருக்கும் கடந்த வாரம் நிச்சயம் நடந்து முடிந்துவிட்டது. கொரோனா வைரஸால் யாரையும் அழைக்க முடியவில்லை. நான் மோதிரம் மாற்றியபோது தாத்தா என்னுடன் இல்லாதது ரொம்பவே வருத்தமாக இருந்துச்சு.

Fear of spreading of corona
Fear of spreading of corona
Premier Living & Rehab Center Info Page

நேரில் சென்று தாத்தாவிடம் தகவல் சொல்வதற்காகச் சென்றபோது, கொரோனா வைரஸ் பாதிப்பால், ஹோமில் இருப்பவர்களைப் பார்க்க பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்கள். தாத்தாவை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால், தாத்தா தங்கியிருந்த அறைக்கு வெளியே வந்து கண்ணாடி வழியாக அவரை அழைத்தேன். என்னைப் பார்த்ததும் குழந்தை மாதிரி ஓடி வந்தார்.

என்னுடைய கைகளில் நான் அணிந்திருந்த மோதிரத்தை தாத்தாவிடம் காட்டினேன். மோதிரத்தைப் பார்த்ததும், எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டதை உணர்ந்துகொண்டு, குழந்தைபோல் அழத்தொடங்கினார். தாத்தாவைக் கட்டியணைக்க முடியலைன்னு நானும் என்னை மறந்து அழுதேன்.

Fear of spreading of corona
Fear of spreading of corona
Premier Living & Rehab Center Info Page

மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளையும் பந்தாடும், இந்தக் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு