Published:Updated:

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய பெரிய பாக்டீரியா கண்டுபிடிப்பு; ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

பாக்டீரியா ( சித்திரிப்புப் படம் )

’ஒரே செல்லால் ஆன இத்துணை பெரிய பாக்டீரியாவைக் கண்டறிவது ஆச்சர்யமான தருணம். இப்படிப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தது என்பது, எவரெஸ்ட் அளவுக்கு உயரமாக இருக்கும் ஒரு மனிதனைக் கண்டறிவதற்கு சமமான ஆச்சர்யம் உடையது!’

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய பெரிய பாக்டீரியா கண்டுபிடிப்பு; ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

’ஒரே செல்லால் ஆன இத்துணை பெரிய பாக்டீரியாவைக் கண்டறிவது ஆச்சர்யமான தருணம். இப்படிப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தது என்பது, எவரெஸ்ட் அளவுக்கு உயரமாக இருக்கும் ஒரு மனிதனைக் கண்டறிவதற்கு சமமான ஆச்சர்யம் உடையது!’

Published:Updated:
பாக்டீரியா ( சித்திரிப்புப் படம் )

பொதுவாக பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், வெறும் கண்களுக்கே புலப்படும் வகையிலான பெரிய பாக்டீரியா தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரிபியன் கடல்பரப்பில் உள்ள லெஸர் அண்டில்ஸ் என்னும் தீவின் சதுப்பு நிலக் காடுகளில் இந்தப் புதிய வகை பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.

இமை
இமை
Pixabay

இந்த பாக்டீரியா கிட்டத்தட்ட ஒரு மனிதனின் கண் இமை முடி போன்ற அளவிலும் வடிவத்திலும் உள்ளது. இந்த பாக்டீரியா 0.9 செ.மீ வரை வளர வாய்ப்புள்ளது. இந்த அளவு, சாதாரண பாக்டீரியாக்களைவிட ஆயிரம் மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Fruit Fly போன்ற சில பூச்சிகளை விடவும் அளவில் பெரியதாக உள்ளது. இந்த நுண்ணியிரியின் அளவு மட்டும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் அமைப்பும் வித்தியாசமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கண்டறியப்பட்ட பாக்டீரியாக்களைவிட இதன் அமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. இந்த பாக்டீரியா தன்னுடைய மரபணுக்களான DNA-வை குட்டி குட்டி பாக்கெட் போன்ற வடிவங்களில் உள்ளடக்கி உள்ளது.

பாக்டீரியா
பாக்டீரியா
கோப்பு படம்

இதற்கு முன்பே சில பெரிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் நூறு முதல் ஆயிரம் செல்களை ஒன்றாக இணைத்து உருவாகியிருக்கும். ஒரு செல்லில் இவ்வளவு பெரிய பாக்டீரியாவைப் பார்ப்பது இதுவே முதல்முறை என்கிறார் இதைக் கண்டுபிடித்த கடல்வாழ்உயிர் ஆராய்ச்சியாளர் ஜீன் மேரி வோலேண்ட்.

"ஒரே செல்லால் ஆன இத்துணை பெரிய பாக்டீரியாவைக் கண்டறிவது நிச்சயமாக ஆஹா என்று கூறும் வகையிலான தருணம். இப்படிப்பட்ட பாக்டீரியாவைக் கண்டறிந்தது என்பது, எவரெஸ்ட் அளவுக்கு உயரமாக இருக்கும் ஒரு மனிதனைக் கண்டறிவதற்கு சமமான ஆச்சர்யம் உடையது" என்று தெரிவித்துள்ளார்.

பாக்டீரியா
பாக்டீரியா
கோப்பு படம்

பல வகையிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இந்த பாக்டீரியாவுக்கு Thiomargarita magnifica எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிதாகக் கண்டறிப்பட்டுள்ள பாக்டீரியா 'ஒரு செல் உயிரிகள்' குறித்து மேலும் ஆராயத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.