Published:Updated:

`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி

தினேஷ் ராமையா
`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே  ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி
`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி

பாகிஸ்தான் குறித்து சமீப காலங்களில் மன அழுத்தத்தைத் தரக்கூடிய செய்திகளே தொடர்ந்து வெளிவருவதாக, அந்நாட்டு தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோஷா வருத்தம் தெரிவித்திருக்கிறார். 

`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே  ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி

பாகிஸ்தான், வரலாறு காணாத பொருளாதார பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. இதனால், அந்நாட்டு அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. போதிய நிதி இல்லாததால், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டும் குறைக்கப்பட்டது. 
இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்த  சமீபத்திய செய்திகள் மன வருத்தத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக, அந்நாட்டு தலைமை நீதிபதி ஆசிஃப் வருத்தம் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில், முன்மாதிரி நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆசிஃப், ``நாட்டின் பொருளாதாரம் குறித்து வெளியாகும் தகவல்கள், அது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவோ அல்லது அதிலிருந்து சமீபத்தில்தான் வெளிவந்தது போலவோ இருக்கின்றன. 

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் கூச்சல் குழப்பங்கள் நமக்கு அவற்றைத் தெளிவுபடுத்துகின்றன. அங்கு சபாநாயகரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ பேசும் நிலையில் இல்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கக்கூடியது. அதனால், நாம் உலகக் கோப்பை கிரிக்கெட்டைப் பார்க்கலாம் என்று டிவி-யில் சேனலை மாற்றினால், அதுவும் நமக்கு வருத்தமளிக்கக்கூடிய தகவலையே கொடுக்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் எதிர்மறையான விஷயங்களில் இருந்து மனதை மாற்ற, நாம் டிவி சேனலை மாற்றுகிறோம். அங்கு உலகக் கோப்பை தொடரில் நமது அணி தோற்பதைக் காண்கிறோம். 

`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே  ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி

தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையில், நமது சமூகத்தின் ஒரு பகுதியில் இருந்து நல்ல விஷயங்களைக் கேள்விப்படுகிறோம் என்பதில் மகிழ்ச்சியே. மக்கள், நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்துதான் நேர்மறையான விஷயங்களைக் கேள்விப்படுகின்றனர். அரசின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதாலும் நீதி வழங்கவேண்டிய இடத்தில் நாம் இருப்பதாலும், விரைவான மற்றும் விலைபோகாத நீதியை வழங்க வேண்டும்'' என்றார். 

`பொருளாதாரம் முதல் கிரிக்கெட் வரை எல்லாமே  ஐ.சி.யூ-வில்! - நொந்துகொள்ளும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி

Photo Credits: BCCI

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலைச் சமாளிக்க, அந்நாட்டு அரசு, உலக வங்கி, சர்வதேச நிதி முனையம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகத் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. அதேபோல், சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில், ஆளும் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பி.எம்.எல்(என்) கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சமீபத்தில், உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்க்கொண்ட பாகிஸ்தான், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை 7 முறை எதிர்க்கொண்டும் ஒருமுறைகூட வெல்லவில்லை என்ற பாகிஸ்தானின் மோசமான சாதனை தொடர்கிறது. இந்த விவகாரங்கள், பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆசிஃபை கவலையடையச் செய்திருக்கின்றன.