Published:Updated:

தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?

தெ.சு.கவுதமன்
தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?
தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?

உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட ஞாயிறு, அர்ஜென்டினாவிலுள்ள 4.4 கோடி மக்களுக்கும் இருள் சூழ்ந்த தினமாக விடிந்தது. அன்று காலை 7 மணிக்கு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. அர்ஜென்டினா மட்டுமல்லாது அருகிலுள்ள உருகுவே, பராகுவே நாடுகளின் பல பகுதிகளிலும்கூட இருள்சூழ்ந்தது. 

தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?

தொலைபேசி, இணையப் பயன்பாடுகள் முற்றிலும் செயலிழந்தன. எதிர்பாராத மின்தடை காரணமாக, பியூனே அயர்ஸ் நகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பெட்ரோல் நிலையங்கள் இயங்காததால், அங்கே மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் குவியத்தொடங்கின. மின்சார ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. வீட்டிலிருந்தபடியே மருத்துவம்பார்த்துவந்த நோயாளிகள், தங்களைக் கவனிக்க யாருமில்லாததால், ஜெனரேட்டரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர். ரெஸ்டாரன்ட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. மின்சாரத்தால் இயங்கக்கூடிய அனைத்தும் செயலிழந்தன. அன்று முழுவதும் மக்களின் அன்றாட நிகழ்வுகளை நிலைகுலையச் செய்த மின் தடை, இரவில்தான் சரியாகத் தொடங்கியது.

தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?

மின்சாரம் வந்தாலும், மின் தடைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. மின் தடை ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் சரிசெய்யக்கூடிய முன்னேற்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அர்ஜென்டினாவின் பணவீக்க உயர்வால் நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கினார்கள். எனவே, வெகுண்டெழுந்த  மக்களின் போராட்டத்தால் இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முன்னெப்போதுமில்லாத புதிரான ஒன்றாக நாடு முழுவதுக்குமான இந்த மின்தடை இருப்பதாக, அர்ஜென்டினா அதிபர் மேக்ரி குறிப்பிட்டார். 

தந்தையர் தினத்தில் இருளில் மூழ்கிய அர்ஜென்ட்டினா! - மக்கள் புரட்சி காரணமா?

அர்ஜென்டினாவும் உருகுவே நாடும் மின்சாரத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. எனவே, இந்த மின் தடையால் உருகுவேயைச் சேர்ந்த 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மின்தடை, சைபர் கிரிமினல்களின் வேலையாக இருக்கலாமென்றும் நம்பப்படுகிறது. இதுகுறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனினும், சரியான காரணம் தெரிவதற்கு இருவார காலமாகலாம் எனத்தெரிகிறது.