Published:Updated:

ஒரு லட்சம் பாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் 84 வயது ஜப்பான் தாத்தா!

தெ.சு.கவுதமன்
ஒரு லட்சம் பாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் 84 வயது ஜப்பான் தாத்தா!
ஒரு லட்சம் பாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் 84 வயது ஜப்பான் தாத்தா!

ஜப்பானைச் சேர்ந்த டெட்சுயா என்ற 84 வயது தாத்தா, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறார். விதவிதமான ஃபேஷன் உடைகளில் அவரது புகைப்படங்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஒரு லட்சம் பாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் 84 வயது ஜப்பான் தாத்தா!

தாத்தா டெட்சுயா, அகிடா நகரில் வசிக்கும் தன் பேரன் நவோயா கூடோவின் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தார். அப்போது, தன்னிடமுள்ள புதிய ஃபேஷன் உடைகளை தாத்தாவுக்கு அணிவித்துப் பார்க்க விரும்பினார். அந்த உடைகளோடு தாத்தாவை விதவிதமாகப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அவரது புகைப்படங்களுக்கு எதிர்பாராத எண்ணிக்கையில் ஃபாலோயர்கள் குவிந்தனர். ஒரே வாரத்தில் அவருடைய ஃபாலோயர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. புகைப்படங்களில் தோல் ஆடைகள், முரட்டுத்தனமான தோற்றம் தரும் அணிகலன்கள், ஆடைகளை அணிந்து மிகவும் ஸ்டைலாகக் காட்சி தருவது, அனைவரையும் பிரமிக்க வைத்தது. ஃபேஷன் உடைகளில் தாத்தா இளமை மிடுக்கோடும், அழகோடும் இருப்பதாகவும், அவரது ஆர்வத்தைப் பார்க்கும்போது 84 வயது தாத்தா என்பதை நம்பவே முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சம் பாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் 84 வயது ஜப்பான் தாத்தா!

இதுகுறித்து பேரன் நவோயா கூறும்போது. ``எனது உடைகளை அணிந்துகொள்வதில் தாத்தாதான் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார். நான் போட்டோஷூட் எடுப்பதற்கான இடங்களை அவரே தேர்ந்தெடுத்தார். தாத்தாவின் படங்கள் எக்கசக்கமாக என் கைவசம் இருக்கின்றன. இனிவரும் நாள்களிலும் தொடர்ந்து பதிவேற்றுவேன். அவரது புகைப்படங்களை போட்டோ ஆல்பமாக உருவாக்கி பரிசளிக்கப் போகிறேன்" என்கிறார். கலக்குங்க தாத்தா!