Published:Updated:

`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்?’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

க.சுபகுணம்
`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்?’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி
`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்?’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் இந்தியப் பிரதமர் மோடியும் விவசாயிகளுக்குப் பெரும் பயனளிக்கும் என்று சில திட்டங்களை வகுத்துள்ளனர். அந்தத் திட்டங்கள் உலக வர்த்தக நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இரண்டு நாடுகளிடமும் கேட்பதற்காகக் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலக வர்த்தக நிறுவனத்தின் காலாண்டு விவசாய உற்பத்தி தொடர்பான கூட்டம், கடந்த திங்கள் கிழமை நடைபெற்றபோது அந்தக் கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்?’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

விவசாய உற்பத்தி மற்றும் அதன் விலை ஆகியவற்றின் இயல்புகுறித்து உலக வர்த்தக நிறுவனம் (WTO) பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அவர்கள், அரசுகளைக் கவனமாகக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த விதத்திலும் எந்த அரசும் சட்டவிரோதமான முறைகளைக் கையாண்டுவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறது WTO. 62 பக்கங்களைக்கொண்ட அந்தத் தொகுப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, வருகின்ற 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடக்க உள்ள இரண்டு நாடுகளும் தெளிவுபடுத்த வேண்டும். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவருமே விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளார்கள். நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் விவசாயம் நலிவடைந்துவிட்டதாகவும், அதை இப்போது அவர் எப்படி முன்னேற்றப்போகிறார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான 100 டிரில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 25 டிரில்லியன் ரூபாயை விவசாயிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். 

`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்?’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

"விவசாய உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தை விலையைக் கருத்தில்கொள்ள வேண்டும். அதேசமயம், அதீத உற்பத்தி நடந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அந்த நிதியை எந்த வகையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அவர் பயன்படுத்தப்போகிறார்?" என்று ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது

Vikatan