Published:Updated:

'கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்போம்'... ஜி20 நாடுகளின் அதிரடி முடிவு

மு.ராஜேஷ்

மக்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும்பகுதி கழிவாகக் கடலில்தான் போய்ச் சேருகிறது. ஒவ்வொரு வருடமும் கடலில் கலக்கும் பல மில்லியன் டன் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதன் பாதிப்பைத் தடுக்க சமீப காலமாகப் பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அதேபோல ஒரு முடிவை ஜி20 நாடுகளும் எடுத்திருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னால் ஜப்பானின் கரிஸவா (Karuizawa) பகுதியில்  ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போதுதான் கடல் மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இது தொடர்பான கூடுதல் முடிவுகள் எடுக்கப்படலாம்.

'கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்போம்'... ஜி20 நாடுகளின் அதிரடி முடிவு

இந்த முடிவின்படி இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பிளாஸ்டிக் கழிவின் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்தும். கடல் மாசுபாட்டைக் குறைக்கவும் பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருள்களை உருவாக்கவும் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்க விரும்புவதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே விருப்பம் தெரிவித்திருக்கிறார். மேலும், வளரும் நாடுகளுக்கு இந்த விஷயத்தில் உதவும் வகையில் வழிகாட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Vikatan