Published:Updated:

`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்

க.சுபகுணம்
`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்
`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள குவின்ஸ்லாந்து மாகாணத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லீயேன் இனோக் (Leeanne Enoch). குவின்ஸ்லாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினரான முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையைக் கொண்டவர். வடக்கு குவின்ஸ்லாந்தில் அமைந்துள்ள யாரபா என்ற பகுதியில் நடைபெற்ற பழங்குடியினத் திருவிழா ஒன்றில் அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கலந்துகொண்டார். அப்போது அவரை அணுகிய ஒரு சுற்றுச்சூழல் போராளி, ஆஸ்திரேலிய பழங்குடிகளின் நீர் சார்ந்த உரிமைகளையும் சுரங்கத் தொழிலுக்காக அவர்களின் நிலங்களையும் அதானி நிறுவனத்துக்குக் கொடுப்பது பற்றிக் கேள்வி எழுப்பினார். 

`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லியேன் இனோக், ``அதானி நிறுவனத்துக்காக என் துறையைச் சேர்ந்தவர்கள் அனுமதி வழங்கியதை நினைத்து மிகவும் மனமுடைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். ``அதை நீங்கள் அனுமதிக்க வேண்டிய காரணம் என்ன?" என்ற எதிர்க்கேள்விக்கு, அதிகாரம் தன்னையும் மீறியதாக இருந்தது என்றும் இருப்பினும் அதானி நிறுவனத்தை எதிர்த்துத் தாம் சூழலியல் போராளிகளோடு இணைந்து நிச்சயமாகப் போராடப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். மத்திய குவின்ஸ்லாந்தில் இருக்கும் கலிலீ (Galilee) பள்ளத்தாக்கு இந்திய சுரங்க நிறுவனமான அதானி குழுமத்துக்குக் கிடைப்பதற்குக் கடந்த வாரம் அந்த மாகாண அரசாங்கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு முந்தைய மாதமே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இனோக் கையிலிருந்த அதிகாரங்கள், அந்த மாகாண ஒருங்கிணைப்புத் தலைவர் கைக்கு மாற்றப்பட்டுவிட்டது.  

`மனமுடைந்துள்ளேன்.. ஆனாலும் அதானி குழுமத்தை எதிர்த்துப் போராடுவேன்’ - ஆஸ்திரேலிய அமைச்சர்

இதுகுறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான டிம் மேண்டர், ``அரசின் முக்கியப் பதவியில் இருப்பவர்களுடைய கருத்துகளுக்கே மதிப்பு அளிக்கப்படுவதில்லை. அவர்களிலேயே பலரும் இந்தத் திட்டத்துக்கு எதிராக நிற்பதை இது காட்டுகிறது" என்று கூறியுள்ளார். அதானி குழுமத்தின் இதற்கு முந்தைய இரண்டு திட்டங்களிலும் இதேபோல் தடுத்து நிறுத்த முயன்று சுற்றுச்சூழல் அமைச்சர் லியேன் இனோக் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan