Published:Updated:

தந்தையின் மன அழுத்தம்! அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி

விகடன் விமர்சனக்குழு

அமெரிக்காவின் வெஸ்ட் டெஸ் மோனிஸ் என்ற நகரத்தில், ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது குடும்பம் வசித்துவருகிறது. சந்திரசேகரின் வீட்டுக்கு அவரின் உறவினர் ஒருவர் நேற்று சென்றுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நான்கு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

தந்தையின் மன அழுத்தம்! அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி

இதுபற்றிப் பேசிய ஐயோவா காவல்துறையினர், ‘'காலை 10 மணிக்கு எங்களுக்கு ஒரு போன்கால் வந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள் கிடந்தன. அவர்கள், சந்திரசேகர் (44), லாவண்யா (41) மற்றும் 15, 10 வயதில் இரண்டு சிறுவர்கள். யார் கொலை செய்தது, எதற்காக இது நடந்தது என்ற எந்தத் தகவலும் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. கடந்த மார்ச்     25-ம் தேதிதான் சந்திரசேகர் இந்தப் புது வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர், மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சந்திரசேகரே தன் குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஐ.டி ஊழியராகப் பணியாற்றிவரும் சந்திரசகேர், மன அழுத்ததால் பாதிக்கப்படுள்ளார். இந்த நோயின் காரணமாக, அவர்தான் தன் மகன் மற்றும் மனைவியைக் கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

Vikatan