Published:Updated:

`இது முஸ்லிம்களுக்கு எதிரான செயல்'...கிறிஸ்ட்சர்ச் வீடியோவை ஷேர் செய்தவருக்குக் கிடைத்த தண்டனை

மு.ராஜேஷ்

கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. 51 பேர் இறந்த அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக பிரன்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னால்கூட பிரன்டன் டாரன்ட் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்த நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவந்த வேறொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 44 வயதான பிலிப்ஸ் ஆர்ப்ஸ் என்பவர் மீது பிரன்டன் டாரன்ட் நேரலையாக ஒளிபரப்பிய தாக்குதல் வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில் அவருக்கு 21 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.

`இது முஸ்லிம்களுக்கு எதிரான செயல்'...கிறிஸ்ட்சர்ச் வீடியோவை ஷேர் செய்தவருக்குக் கிடைத்த தண்டனை

பிரன்டன் டாரன்ட் தாக்குதல் வீடியோவை `கொலைகளை எண்ணுங்கள்' (kill count) எனக் குறிப்பிட்டு 30 பேருக்கு ஷேர் செய்திருந்தார். மேலும், அந்த விடியோவை `அற்புதமானது' எனவும் குறிப்பிட்டிருந்தார். பிலிப்ஸ் ஆர்ப்ஸ் அவரது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஸ்டீபன் ட்ரிஸ்கால் ``இது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்கக் குற்றம்" எனத் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் வீடியோ ஆட்சேபனைக்குரிய காட்சிகளைக் கொண்டிருப்பதால் அதைப் பகிர்பவர்களுக்கு 14 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக நியூசிலாந்து நாட்டுத் தணிக்கைத் துறையின் தலைமை அதிகாரி டேவிட் ஷாங்க்ஸ் தெரிவித்திருக்கிறார். 

Vikatan