Published:Updated:

`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா!' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

மலையரசு

அமெரிக்கா... பல இந்திய மக்களுக்குக் கனவு நாடாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் அங்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முறையாகச் சிலர் செல்லும் அதே சமயத்தில் சிலர் தவறான முறைகளே தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது மெக்ஸிகோ வழி. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர்கள் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா!' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

பாலைவனம் நிரம்பிய அந்த எல்லை வழியாகச் செல்லும்போது பல்வேறு உயிரிழப்புகள் நிலவி வருகிறது. இதற்கிடையே, இந்த எல்லை வழியாக அமெரிக்காவில் தஞ்சம் அடையச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி தாகத்தால் உயிரிழந்துள்ளார். பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட 6 வயதுச் சிறுமி குருப்ரீத் கவுர். இவரின் தாய் அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி இடைத்தரகர்கள் மூலமாக மெக்ஸிகோ எல்லை வழியாகப் பயணம் செய்துள்ளனர். அவர்களுடன் இன்னும் சில இந்தியர்களும் சென்றுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மெக்ஸிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது 108 டிகிரி வெயிலில் சிக்கித் தவித்துள்ளனர்.

`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா!' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

அந்த நேரத்தில் சிறுமி தாகத்தால் தவிக்க, சிறுமியை மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து தாய் தண்ணீர் தேடிச் சென்றுள்ளார். போனவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிகமான நாவறட்சியின் காரணமாக சிறுமி அங்கேயே உயிரிழந்துள்ளார். பின்னர் 22 மணி நேரம் கழித்துதான் சிறுமியின் தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுமிக்கு இன்னும் சில நாள்களில் பிறந்த நாள் வரவுள்ளது. இந்த நேரத்தில் கடுமையான தாகத்தில் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா!' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

சிறுமி உயிரிழந்ததைக் கண்டுபிடித்த அமெரிக்க பார்டர் போலீஸார், ``சிறுமியை ஒப்படைத்துவிட்டுச் சென்ற பிறகு அவர் திரும்ப வரவேயில்லை. 22 மணி நேரம் கழித்து அவர்கள் சென்ற காலடித்தடத்தை வைத்துக் கண்டுபிடித்தோம். இது ஒரு புத்தியில்லாத மரணம். லாபத்துக்கு ஆசை காட்டி சில ஏஜென்டுகள் இப்படி இவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.

Vikatan