Published:Updated:

`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு

மலையரசு
`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு
`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு

`கான்ட்ரவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ என்ற சட்டத்திருத்தம் ஹாங்காங்கில் புயலைக் கிளப்பி வருகிறது. `வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நாடு கடத்த இதுவரை ஹாங்காங்கில் எந்தச் சட்டமும் இல்லை. தற்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், ஹாங்காங்கில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, மீண்டும் நாடு திரும்பினால், அவரைச் சம்பந்தப்பட்ட நாட்டுக்குக் கைதியாக அனுப்பிவைக்க முடியும்’ என்பதே இந்தச் சட்டத்தின் சாரம்சம். இதைக் கொண்டுவர அரசு முனைப்புகாட்ட போராட்டம் வெடித்தது. 

`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு

இது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வரி ஏய்ப்பு செய்தால்கூட நாடு கடத்தப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்க ஹாங்காங் நாடாளுமன்றமே ஸ்தம்பித்தது. கொட்டும் மழை, குளிர், இரவு என எதையும் பொருட்படுத்தாமல் நகரில் உள்ள முக்கால்வாசி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மாஸ் காட்டினர். போராட்டத்தின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. சாலைகளில் மறியலில் ஈடுபட்ட மக்களை கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும், ரப்பர் புல்லட்டுகளைப் பயன்படுத்தியும் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர். 

`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு

மக்களின் மாஸ் போராட்டத்துக்கு அரசு பணிந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹாங்காங் அரசின் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம், ``இந்த மசோதா சமூகத்தில் நிறைய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தச் சட்டத்திருத்தத்தின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அரசின் மீதான நன்மதிப்பை அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெற முயல்கிறோம். 

`மக்களின் மாஸ் போராட்டம்..!' - பணிந்தது ஹாங்காங் அரசு

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்கலாம் என அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இந்தச் சட்டத்திருத்துக்காக எந்த ஒரு டெட்லைனும் இதுவரை விதிக்கப்படவில்லை. மற்றவர்களுடன் பேசி முடிவு செய்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும்" என்றார். இது தற்காலிக வெற்றிதான் என்றாலும், அரசு முழுமையாக இந்த பில்லை திரும்பப் பெறுவதாக கூறவில்லை. இதனால் ஹாங்காங்கில் குழப்பம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Vikatan