Published:Updated:

`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்

சத்யா கோபாலன்
`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்
`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்

மேற்கு ஜப்பானில் உள்ளது கமிகட்சு நகரம். இது மலைப் பிரதேசம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு மொத்தமாக 1,500 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. வரும் 2020-ம் ஆண்டுக்குள் கமிகட்சுவை குப்பைகளே இல்லாத நகரமாக மாற்ற அந்த நகர மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்

அதன்படி தாங்கள் பயன்படுத்தும் பொருள்களை 45 வகையாகப் பிரித்து அதை மறு சுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். “இது மிகவும் கடினமான ஒரு விஷயம்” எனத் தெரிவித்துள்ளார் நாகோ யோகோயமா (Naoko Yokoyama) என்ற இளைஞர். தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு வருடத்துக்கு முன்னர்தான் இந்த நகருக்குக் குடிபெயர்ந்தேன். இங்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற என் எண்ணம் அதிகரித்துள்ளது. 

`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்

இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டில் உள்ள தேவையில்லாத பொருள்களை அவர்களே தனியாகப் பிரித்துக் கொண்டு வருவார்கள். தேவையில்லாத பொருள்கள் போடும் கிடங்கில் பல்வேறு தனி தனி அறைகள் உள்ளன அதில் மக்களே சேகரித்து வைத்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார். 

`ஜீரோ வேஸ்ட்’ நகரம்! - உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஜப்பான்

கமிகட்சு நகரில் உள்ள மக்கள் தாங்கள் பயன்படுத்து தலையணை முதல் பிரஸ் வரை என அனைத்தையும் தனித் தனியாகச் சேகரித்து மறு சுழற்சி செய்கின்றனர். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள்களை கட்டாயம் மறுசுழற்சி செய்கிறார்கள். 

அந்த நகரத்தில் இதுவரையிலும் 80 சதவிகிதம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு மட்டும் 286 டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. 
 

Vikatan