Published:Updated:

`காலை 10 மணிக்கு ஒரு போன்கால் வந்தது!' - அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் மர்ம மரணம்

சத்யா கோபாலன்
`காலை 10 மணிக்கு ஒரு போன்கால் வந்தது!' - அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் மர்ம மரணம்
`காலை 10 மணிக்கு ஒரு போன்கால் வந்தது!' - அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் மர்ம மரணம்

அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் உள்ளது வெஸ்ட் டெஸ் மோனிஸ் என்ற நகரம். அங்கு ஆந்திராவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரின் வீட்டுக்கு அவரின் உறவினர் ஒருவர் நேற்று சென்றுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

`காலை 10 மணிக்கு ஒரு போன்கால் வந்தது!' - அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் மர்ம மரணம்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இது பற்றி பேசிய ஐயோவா காவல்துறையினர், ‘காலை 10 மணிக்கு எங்களுக்கு ஒரு போன்கால் வந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள் கிடந்தன. அவர்கள் சந்திரசேகர் (44), லாவண்யா (41) மற்றும் 15, 10 வயதில் இரண்டு சிறுவர்கள். யார் கொலை செய்தது, எதற்காக இது நடந்தது என்ற எந்தத் தகவலும் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`காலை 10 மணிக்கு ஒரு போன்கால் வந்தது!' - அமெரிக்காவில் ஆந்திரக் குடும்பம் மர்ம மரணம்

தற்போது வரை நடந்துள்ள முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்திரசேகர் மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கேயே தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சந்திரசேகரின் குடும்பத்தினர் அவரை ஹைதராபாத்தில் வந்து வாழும்படி கேட்டுள்ளனர். அதை மறுத்துள்ள சந்திரசேகர், தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு முன்னதாக வேறு யாரும் வீட்டுக்குள் வரவில்லை என்பது தொழில் சான்றுகள் மூலம் உறுதியாகியுள்ளது. 

சந்திரசேகரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதிதான் சந்திரசேகர் இந்தப் புது வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சந்திரசேகரே தன் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைகள் முடிந்த பிறகுதான் நான்கு பேரின் இறப்பில் இருக்கும் மர்மம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

Vikatan