Published:Updated:

298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்! - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

சக்தி தமிழ்ச்செல்வன்
298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்! - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு
298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்! - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி, ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்திலிருந்து அடுத்த நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை நோக்கி எம்.ஹெச் 17 விமானம் 298 பயணிகளுடன் கிளம்பியது. ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அப்பால்  சுமார் 50 கி.மீ தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது. அது, நொறுங்கி விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. 

298 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது 4 பேர்! - 5 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு

ஆனால் தற்போது,  நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி, ஒலெக் புல்டோவ் மற்றும் லியோனிட் கார்சென்கோ என்ற நால்வரும் இதில்  சம்பந்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்து விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களில் மூவர், ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். இகோர் கிர்கின்  ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கர்னல். அவருக்கு, கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவி எனவும் குற்றம் சாட்டியவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பாதிப்புக்குள்ளான காலகட்டத்தில், உக்ரைன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவுபெற்ற உக்ரைன் பிரிவினைவாத குழுக்கள் இடையே மோதல்கள்  நிலவிவந்தன. அப்போது, உக்ரைன் ராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் விசாரணையாளர்கள். நான்கு பேருக்கு எதிராக சர்வதேச கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான நீதிமன்ற வழக்கு, நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் விசாரணையைத் தொடங்க உள்ளது.
 

Vikatan