Published:Updated:

`ஒரு நாளில் 37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்!'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

சத்யா கோபாலன்
`ஒரு நாளில்  37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்!'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை
`ஒரு நாளில் 37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்!'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளுக்குத் தங்களின் ஆதரவை அளிக்கும் விதமாக, 2000-ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபை சிறப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதன்படி, ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி, சர்வதேச அகதிகள் தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது. அதிலிருந்து, ஆண்டுதோறும் அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

`ஒரு நாளில்  37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்!'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

இன்று உலகம் முழுவதும் அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.  போர், துன்புறுத்தல், மோதல் போன்ற காரணங்களால், கடந்த 2018-ம் ஆண்டு மட்டும் சுமார் 7 கோடி மக்கள் தங்களின் சொந்த இருப்பிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

`ஒரு நாளில்  37,000 பேர்; ஒரு வருடத்தில் 7 கோடி பேர்!'- அகதிகள் பற்றி ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

20 ஆண்டுகளைவிட தற்போது இந்த மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் 37,000 பேர் இடம்பெயருகின்றனர். புதிய புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு 13 லட்சம் மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இதில், எத்தியோப்பியாதான் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த 10,50,000 மக்கள், கடந்த வருடம் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். அடுத்ததாக, 10 லட்சம் மக்களுடன் சிரியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 92,400 அகதிகள் மட்டுமே மீள் குடி அமர்த்தப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ‘ஒவ்வோர் ஆண்டும் அகதிகளின் எண்ணிக்கையும் அவர்கள் இடம்பெயருவதற்கான காரமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால், பழைய காரணங்களுக்கான தீர்வுகள் இன்று வரை கிடைக்கவில்லை’ என ஐ.நா-வின் அகதிகள் அமைப்பின் ஆணையர் க்ராண்டி கூறியுள்ளார்.

Vikatan