Published:Updated:

`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்

சத்யா கோபாலன்
`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்
`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்

கனடா நாட்டைச் சேர்ந்த டிஃப்பனி ஆடம்ஸ் (Tiffani Adams ) என்பவர் கடந்த 9-ம் தேதி ஏர் கனடா விமானத்தில், கியூபெக் நகரிலிருந்து டொரொண்டோவுக்குச் சென்றுள்ளார். சுமார் 90 நிமிடங்கள் கொண்ட அந்தப் பயணத்தின்போது ஆடம்ஸ் விமானத்திலேயே தூங்கியுள்ளார்.

`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்

மாதிரி புகைப்படம்

பின்னர் கண் விழித்துப் பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்துள்ளது. விமானம் டொரொண்டோவில் இருந்தாலும் விமானத்தில் யாரும் இல்லை. பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு விமானத்திலிருந்து வெளியில் வந்துள்ளார். இந்தச் சம்பவங்களை ஆடம்ஸ் தன்னிடம் கூறியதாக அவர் பேசியதைப் போன்றே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆடம்ஸின் நண்பர் டியானே நோயல் டாலே. அந்தப் பதிவில்,  ``ஒன்றரை மணி நேரம் பயணத்தின்போது நான் பாதியிலேயே தூங்கியுள்ளேன். எங்கு எப்படித் தூங்கினேன் எனத் தெரியவில்லை. விழித்துப் பார்க்கும்போது விமானம் டொரொண்டோவில் இருந்தது. ஆனால், முழுவதும் இருட்டாக இருந்தது. அதை நான் பார்த்ததும் முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன். பின்னர்தான் நான் விமானத்தில் உள்ளது எனக்கு நினைவுக்கு வந்தது.

`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்

நள்ளிரவில் வெளியிலும் விமானத்திலும் பயங்கர இருட்டாக இருந்தது. உதவிகேட்டு என் நண்பருக்குப் போன் செய்யலாம் என நினைத்து போனை எடுத்துப் பார்த்தால் அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. பிறகு போனுக்கு சார்ஜ் போடலாம் என நினைத்தால் விமானம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. பின்னர் எப்படியோ இருட்டிலேயே விமானத்தில் சுற்றித் திரிந்து ஒரு டார்ச் லைட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். இறுதியாக விமானத்தின் கதவுக்கு அருகில் செல்லும்போதுதான் தெரிந்தது, என்னை உள்ளேயே விட்டுவிட்டு விமானத்தைப் பூட்டிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து, மிகவும் சிரமப்பட்டு விமானத்தின் கதவைத் திறந்தால் தரைக்கும் நான் நிற்கும் இடத்துக்கும் 50 அடி உயரம் உள்ளது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போய் அப்படியே விமானத்தின் படியில் அமர்ந்துகொண்டு டார்ச் லைட் மூலம் விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கு சிக்னல் காட்டினேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு கார் டிரைவர் அந்த வழியாக வந்தார். விமானத்தின் மீது என்னைப் பார்த்ததும் அவர் திகைத்துப் போனார். அவர்தான் என்னை விமானத்திலிருந்து இறக்கி அழைத்துச் சென்றார். நாங்கள் செல்லும்போது அவர், `நீங்கள் தூங்கியது கூடத் தெரியாமல் பணியாளர்கள் உங்களை விட்டுச் சென்றுவிட்டார்களா? யாரும் எழுப்பவில்லையா?” எனக் கேட்டார். அதே சந்தேகம் எனக்கும் உள்ளது என அவருக்குப் பதில் கூறினேன்.

`முதலில் கெட்ட கனவு என்றே நினைத்தேன்’ - தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்

பிறகு ஒரு வழியாக விமானநிலையத்துக்கு வந்தடைந்தேன். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஏர் கனடா விமான அதிகாரிகளிடம் கூறி முறையிட்டேன். அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இனிமேல் நான் நிச்சயமாக விமானத்தில் தூங்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் ஆடம்ஸ். 

இவரைப் போன்று, உங்களுக்கும் பயணத்தின்போது தூங்கிய அனுபவம் இருந்தால் அதை கமென்டில் பதிவிடுங்கள்!

Vikatan