Published:Updated:

28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள்! - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்

சத்யா கோபாலன்
28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள்! - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்
28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள்! - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் கடந்த மாதம் 26-ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து மூன்று வெவ்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்தது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள்! - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்

PC : Twitter /@Daniel_Rolph_1

இந்தச் சம்பவம் நடந்து சரியாக அடுத்த ஒரே மாதத்தில், அதாவது இன்று நேபாளத்தில் பல பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான கறுப்புக் கவர்கள் கிடந்துள்ளன. தகவல் அறிந்த காவல்துறையினர் நடத்திய சோதனையில் அந்த நாடு முழுவதும் சுமார் 28 இடங்களில் இந்த கறுப்பு நிறக் கவர்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிஷோவ்ராஜ், ``நாடு முழுவதும் இன்று காலை முதல் மொத்தம் 28 இடங்களில் கறுப்பு நிறக் கவர்கள் கண்டறியப்பட்டுள்ளன.  கிர்திபூர், ஜவலாகெல், காத்மண்டு ஆகிய இடங்களில் தலா இரண்டு கவர்கள் எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் வெடிகுண்டுகள் கிடையாது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் யாரோ இதைச் செய்து புரளி கிளப்பிவிட்டுள்ளனர். நாங்கள் தீவிரமாக சோதனை நடத்திவிட்டோம் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. பொதுமக்கள் பயப்படவேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். 

28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள்! - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்

PC : Twitter /@UPH_2016

நேபாள கம்யூனிஸ்ட் என்ற பிரிவினைவாதக் குழுதான் மே  26-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குக் காரணம் என அந்நாட்டு போலீஸார் சந்தேகித்துள்ளனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அரசு அவர்களுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து அந்தக் குழுவின் செயல்பாடு அதிகமாக உள்ளது. எனவே, இன்று நடந்துள்ள புரளியும் அவர்களின் வேலையாக இருக்கும் எனச் சந்தேகித்துள்ளனர்.