Published:Updated:

'எந்த ஸ்மார்ட்போனை வேண்டுமானாலும் அன்லாக் செய்யலாம்' - இஸ்ரேல் நிறுவனத்தின் புதிய மென்பொருள்

மு.ராஜேஷ்

ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் என அனைத்தையும் அன்லாக் செய்யும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை Cellebrite என்ற இஸ்ரேல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், இதை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்த முடியாது. காவல்துறை, உளவுத்துறை, ராணுவம் போன்று அங்கீகரிக்கப்பட்ட  அமைப்புகளுக்கு மட்டுமே இந்த மென்பொருள் வழங்கப்படும். பொதுவாகக் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரிடம் சிக்கும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்வதன் மூலமாக ஆதாரங்களைத் திரட்ட முயற்சி செய்வார்கள். ஆனால், அது அவர்களுக்குப் பெரும்பாலும் சிக்கலான ஒன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக 2016-ல் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. குற்றவாளி ஒருவரின் ஐபோனை அன்லாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்தது எஃப்.பி.ஐ. அதனால் அந்த போனை அன்லாக் செய்ய வேண்டுமென ஆப்பிள்  நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது.

'எந்த ஸ்மார்ட்போனை வேண்டுமானாலும் அன்லாக் செய்யலாம்' - இஸ்ரேல் நிறுவனத்தின் புதிய மென்பொருள்

ஆனால், வாடிக்கையாளரின் உரிமையை மீறும் செயலாக அமையும் என அதற்கு மறுப்பு தெரிவித்தது ஆப்பிள் நிறுவனம். அதன் பின்னர், வேறு சில முயற்சிகள் மூலமாக அதை அன்லாக் செய்தது எஃப்.பி.ஐ. இது போலச் சிக்கலான சமயங்களில் UFED Premium எனப்படும் இந்த மென்பொருள் உதவும். இதைப் பயன்படுத்துவதன் மூலமாக ஆப்களின் தரவுகள், இ-மெயில், அழிக்கப்பட்ட தகவல்கள் எனப் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். iOS 7 முதல் iOS 12.3 வரையிலான இயங்குதளங்களைப் பயன்படுத்தும் ஆப்பிள் சாதனங்களையும், சாம்சங், வாவே, ஷியோமி எனப் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் போன்களையும் இதன் மூலமாக அன்லாக் செய்ய முடியும் எனவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Vikatan